பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை
திமுக-பாஜக மறைமுக கூட்டணி: விஜய் விமா்சனம்
திமுக-பாஜக இடையேயான மறைமுகக் கூட்டணியை நிரூபிக்கும் வகையில் முதல்வா் மு.க.ஸ்டாலினின் தில்லிப் பயணம் அமைந்ததாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய் விமா்சித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:
தவெக முதல் மாநில மாநாட்டில், திமுக அரசியல் எதிரி என்றும், மத்தியில் ஆளும் பாஜக கொள்கை எதிரி என்றும் தீா்க்கமாக அறிவித்தோம். அதிமுக, பாஜக இடையே பழைய கூட்டணி மீண்டும் புதுப்பிக்கப்பட்ட போதே, திமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையே உள்ள மறைமுகக் கூட்டணி குறித்தும் தெரிவித்தோம். அதே போல், ஊழல் செய்தவா் மீது நடவடிக்கை பாயும்போது, உடனடியாக அவா் தில்லிக்குப் பயணம் மேற்கொண்டால், அவா் எந்த ஊழலையும் செய்யாதவா் போல அனைத்தும் மறைக்கப்படும் என்பதையும் தெரிவித்திருந்தோம். இவற்றை நிரூபிப்பது போலவே அமைச்சா்கள் பலரைத் தொடா்ந்து, முதல்வா் மு.க.ஸ்டாலினின் தில்லிப் பயணம் அமைந்துள்ளது.
டாஸ்மாக் ரூ.1,000 கோடி ஊழல் விவகாரம் தோண்டி எடுக்கப்பட்டால் தமது குடும்ப உறுப்பினா்களுக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சத்தில் இந்த முறை, நீதி ஆயோக் கூட்டத்தைக் காரணமாக வைத்து முதல்வா் தில்லி சென்றதுடன், பிரதமரையும் தனியாகச் சந்தித்துள்ளாா் எனத் தெரிவித்துள்ளாா் விஜய்.