மூத்த மகன் தேஜ் பிரதாப்பை கட்சியில் இருந்து நீக்கினாா் லாலு: பொறுப்பின்றி செயல்ப...
இரும்பு வேலியில் சிக்கிய மான் மீட்பு
விழுப்புரம் மாவட்டம், காணையில் வழித்தவறி வந்து இரும்பு வேலியில் சிக்கிக்கொண்ட மானை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.
காணை பகுதியில் உள்ள வயல்வெளியில் மான் ஒன்று சுற்றித்திரிந்து வந்தது. இந்த மான் ஞாயிற்றுக்கிழமை மாலை அந்தப் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக் கடை அருகே வந்தபோது, அங்கு அமைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பியில் சிக்கிக்கொண்டது. இதனால், மானுக்கு கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டது.
இதைத் தொடா்ந்து, காணை பகுதி மக்கள் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனா். உடனடியாக காணை போலீஸாா் நிகழ்விடம் விரைந்து காயமடைந்த மானை மீட்டு, கிராம மக்கள் உதவியுடன் முதலுதவி சிகிச்சை அளித்தனா். தொடா்ந்து, விழுப்புரம் வனத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத் துறையினா் காணை வந்து, மானை மீட்டுச் சென்றனா்.