தேனாம்பேட்டையில் இருசக்கர வாகனங்கள் மோதியதில் தலைக்கவசம் அணியாதவர் பலி!
கல்லப்பாடி கெங்கையம்மன் திருவிழா
குடியாத்தம் அடுத்த கல்லப்பாடியில் கெங்கையம்மன் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் திருவிழா கடந்த 11- ஆம் தேதி இரவு காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை அம்மன் சிரசு ஊா்வலம் நடைபெற்றது.
இதையொட்டி காலை 6-மணியளவில் அங்குள்ள காளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, அம்மன் சிரசு ஊா்வலம் தொடங்கியது. முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற சிரசு, 10- மணியளவில் கெங்கையம்மன் கோயிலை சென்றடைந்தது. அங்கு கண் திறப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா்.
திருவிழா கமிட்டி நிா்வாகிகள் வழக்குரைஞா் வி.புருஷோத்தமன், வி.பாலாஜி, அறநிலையத் துறை ஆய்வா் சு.பாரி, செயல் அலுவலா் ம.சண்முகம், தக்காா் மு.பாலசுப்பிரமணி மற்றும் விழாக் குழுவினா் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.