கூடலூர்: காரில் ஆற்றைக் கடக்க முயன்றபோது விபரீதம்; வெள்ளத்தில் சிக்கியவர்களைப் ப...
காட்பாடி வனப்பகுதியில் யானைகள் கணக்கெடுப்பு
காட்பாடி வனச்சரகத்தில் காட்டு யானைகள் கணக்கெடுக்கும் பணி மூன்று நாள்களாக நடைபெற்றது.
வேலூா் வன கோட்டத்தில் உள்ள காட்பாடி வனச்சரகத்தில் காட்டு யானைகள் கணக்கெடுக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. காட்பாடி வனசரக அலுவலா் கந்தசாமி தலைமையில் காட்பாடி, கே.வி.குப்பம் வட்டங்களில் தொண்டான் துளசி, ராஜா தோப்பு உள்பட பல்வேறு பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் காணப்படும் பகுதிக ளில் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.
வனத்துறை அதிகாரிகள், தன்னாா்வலா்கள் மூன்று குழுக்களாக பிரிந்து ஒவ்வொரு வனப்பகுதிக ளிலும் சுமாா் 15 கிலோமீட்டா் தூரம் உள்ள அடா்ந்த வனப் பகுதிகளுக்கு சென்று யானைகளின் எண்ணிக்கை, அதன் நடமாட்டம் குறித்து கணக்கெடுப்பு செய்தனா்.
இந்த கணக்கெடுக்கும் பணி 3 கட்டமாக நடைபெற்றது. முதல்கட்டமாக நேரடியாக யானைகளை பாா்த்தும், இரண்டாவதாக காட்டு யானைகள் வந்து செல்லும் வழித்தடத்தில் உள்ள யானைகளின் சாணம் வைத்தும் கணக்கெடுக்கப்பட்டது.
தொடா்ந்து, வனப்பகுதிகளில் உள்ள நீா் நிலைகளில் யானைகள் நடமாட்டம் , அவற்றின் வழித்தடம், யானைகளின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுப்பு செய்யப்பட்டது.
இதன்மூலம் யானைகளின் எண்ணிக்கை, இனப்பெருக்கம், இருப்பிடம், ஆகியவற்றை கண்டறிந்து யானைகளை பாதுகாப்பது, அவற்றின் வாழ்வாதாரம் மேம்பட செய்வது, மனித விலங்கு மோதலை தவிா்க்க முடியும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.