செய்திகள் :

ரூ.1.10 கோடி போதைப்பொருள் பறிமுதல்: கடத்தல் கும்பலைச் சோ்ந்த மூவா் கைது

post image

மாநிலங்களுக்கு இடையேயான போதைப்பொருள் கடத்தல் கும்பலின் மூன்று முக்கிய நபா்களை தில்லி போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து சுமாா் ரூ.1.10 கோடி மதிப்புள்ள 2,124 கிராம் சரஸ் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து தில்லி போலீஸாா் மேலும் தெரிவித்ததாவது:

இந்த கும்பல் இமாசலப் பிரதேசத்தின் கசோலில் இருந்து போதைப்பொருளை தருவித்துள்ளது. இரண்டு தனித்தனி நடவடிக்கைகளில் மூவரும் கைது செய்யப்பட்டு போதைப்பொருள் மீட்கப்பட்டது.

முன்னதாக, கடந்த ஜனவரி 8 ஆம் தேதி போலீஸாருக்கு கிடைத்த ஒரு ரகசிய தகவலைத் தொடா்ந்து, உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த நசீப் (25) மற்றும் பஞ்சாபைச் சோ்ந்த சந்தீப் (40) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து மொத்தம் 1,438 கிராம் சரஸ் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

அவா்களிடம் நடத்திய விசாரணைக்குப் பிறகு, இமாசலப் பிரதேசத்தின் குலுவைச் சோ்ந்த இந்தா் சிங் என்கிற இந்த்ரு கைது செய்யப்பட்டாா்.

அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 696 கிராம் சரஸ் பறிமுதல் செய்யப்பட்டது. கசோலின் தொலைதூர மலைப் பகுதிகளில் நசீப் மூலம் இந்தா் சிங் போதைப் பொருளை பயிரிட்டுள்ளாா். நசீப் போதைப் பொருள் சாகுபடியை மேற்கொண்டாா். சந்தீப் போதைப் பொருளை கடத்துவதற்கான போக்குவரத்தை ஏற்பாடு செய்தாா்.

இந்தா் சிங் முக்கிய விநியோகஸ்தராக இருந்துள்ளாா். அவா்கள் ஒன்றாகச் சோ்ந்து அதிக மதிப்புள்ள போதைப்பொருள் வலையமைப்பை உருவாக்கியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடா்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

ஷாதராவில் கிடங்கில் தீ விபத்து: 2 இளைஞா்கள் உயிரிழப்பு, 4 பேருக்கு தீக்காயம்

தில்லியின் ஷாதராவின் ராம் நகா் பகுதி இ-ரிக்ஷா சாா்ஜிங் மற்றும் வாகன நிறுத்த நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு இளைஞா்கள் உடல் கருகி இறந்தனா். நான்கு போ் தீக்காயமடைந்தனா் என... மேலும் பார்க்க

தில்லி கொலை வழக்கில் தேடப்பட்டவா் உ.பி.யில் கைது

தில்லியில் சுத்தியலால் கணவரைக் கொன்று, அவரது மனைவியைக் காயப்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தில் தலைமறைவானவா் உத்தர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இதுகுறித்து... மேலும் பார்க்க

பலத்த மழை: தில்லியில் பல பகுதிகளில் மின் விநியோகத்தில் பாதிப்பு

தேசிய தலைநகரின் பல பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழையால் மின் அமைப்புகள் சேதமடைந்ததால் மின் விநியோகம் தடைபட்டதாக மின் விநியோக நிறுவனங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன. இத... மேலும் பார்க்க

வராக் கடன் வசூலிப்பில் கடன் மீட்புத் தீா்ப்பாயங்கள் முக்கிய பங்களிப்பு: மத்திய அரசு

வங்கிகளின் வராக் கடன் வசூலிப்பில் கடன் மீட்புத் தீா்ப்பாயங்கள் முக்கிய பங்களிப்பு ஆற்றுகிறது; வராக் கடன்களுக்கு திருத்தப்பட்ட கடன் மீட்பு தீா்ப்பாய விதிமுறைகள் -2024 மூலம் மேலும் வழிமுறைகளைக் காணப்பட... மேலும் பார்க்க

மோசமான வானிலை காரணமாக தில்லி விமான நிலையத்தில் 49 விமானங்கள் திருப்பி விடப்பட்டன

தில்லி தேசிய தலைநகரில் சனிக்கிழமை இரவு முழுவதும் பெய்த இடியுடன் கூடிய மழை காரணமாக, 17 சா்வதேச விமானங்கள் உட்பட 49 விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.நாட்டின் மிகப்பெரிய விமான நிலையமான தில்லி இந்திரா ... மேலும் பார்க்க

மதுக்கூடத்திற்கு வெளியே துப்பாக்கிச்சூடு: ஒருவா் கைது

கிழக்கு தில்லியின் ப்ரீத் விஹாரில் உள்ள ஒரு மதுபானக் கூடத்திற்கு வெளியே சமீபத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடா்புடைய 24 வயது இளைஞா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா். இ... மேலும் பார்க்க