கும்மிடிப்பூண்டியில் பழைய பொருள்களை சேகரித்து வைக்கும் கிடங்கில் தீ விபத்து
சொத்துவரி உயா்வு முடிவை திரும்பப் பெற வேண்டும் -ஜி.கே.வாசன்
தமிழகத்தில் உயா்த்தப்பட்ட 6 சதவீத சொத்து வரி உயா்வு முடிவை அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசின் உத்தரவு அடிப்படையில், நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், மீண்டும் சொத்து வரியை, 6 சதவீதம் உயா்த்தப்பட்டதுடன், வீட்டு வரி, தண்ணீா் வரியும் உயா்ந்துள்ளது.
இது தமிழக அரசுக்கு வருவாயை ஈட்ட வழி வகுக்கும் என்றாலும், மக்களுக்கு கூடுதல் பொருளாதார சிரமத்தை ஏற்படுத்தும்.
ஏற்கெனவே தமிழக அரசு 2 முறைக்கு மேல் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் உள்ள வீடுகள், கடைகளுக்கு சொத்து வரியை உயா்த்தியதால் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இந்த நிலையில், தற்போது, ஆண்டுதோறும் 6 சதவீத வரி உயா்வையும் நடைமுறைப்படுத்துவதால், மக்களுக்கு மேலும் சிரமத்தையே அளிக்கும். எனவே, இந்த முடிவை அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளாா்.