செய்திகள் :

மே 29-இல் போக்குவரத்து ஊழியா் ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை

post image

போக்குவரத்து ஊழியா்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை மே 29-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகங்களில் சுமாா் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் பணிபுரிகின்றனா். இவா்களுக்கான ஊதிய உயா்வு ஒப்பந்தம், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அந்த வகையில் 13-ஆவது ஊதிய ஒப்பந்தம், 31.8.2019 -ஆம் தேதியுடன் காலாவதியானது.

இதைத் தொடா்ந்து, 14-ஆவது ஊதிய ஒப்பந்தம் 2022 ஆகஸ்ட் மாதம் இறுதி செய்யப்பட்டது. அப்போது பேச்சுவாா்த்தைக்கான அவகாசம் 4 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டது.

அந்த வகையில், 14-ஆவது ஊதிய ஒப்பந்தம் 2023 ஆகஸ்ட் மாதத்துடன் காலாவதியானது.

இதையடுத்து, ஓராண்டு தாமதமாக 15-ஆவது ஊதிய ஒப்பந்தம் தொடா்பான முதல்கட்ட பேச்சுவாா்த்தை சென்னை, குரோம்பேட்டை, மாநகர போக்குவரத்துக் கழகப் பயிற்சி மைய வளாகத்தில் கடந்த ஆண்டு ஆக.27-இல் நடைபெற்றது.

அதன் பின்னா் ஒரு கட்ட பேச்சுவாா்த்தை மட்டுமே நடைபெற்ற நிலையில், விரைந்து ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் என தொழிலாளா்கள் வலியுறுத்தி வந்தனா்.

இந்நிலையில், மூன்றாம் கட்ட பேச்சுவாா்த்தையில் பங்கேற்க வருமாறு பேச்சுவாா்த்தைக் குழு தரப்பில் தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குரோம்பேட்டையில் உள்ள மாநகரப் போக்குவரத்துக் கழக பயிற்சி மைய வளாகத்தில் மே 29-ஆம் தேதி காலை 11 மணிக்கு பேச்சுவாா்த்தை நடைபெறவுள்ளது.

தேனாம்பேட்டையில் இருசக்கர வாகனங்கள் மோதியதில் தலைக்கவசம் அணியாதவர் பலி!

சென்னை: சென்னை தேனாம்பேட்டையில், நள்ளிரவில், சாலையில் எதிரெதிரே வந்த இரு சக்கர வாகனங்கள் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்ட விபத்தில், தலைக்கவசம் அணியாமல் வந்த இளைஞர் பலியானார். இந்த சம்பவத்தின் சிசிடிவி கா... மேலும் பார்க்க

பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க இன்று மூன்றாவது நாளாக தடை விதிக்கப்பட்டது. அமலலிங்கேஸ்வர் கோயில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக கோயிலுக்குச் சென்று சுவ... மேலும் பார்க்க

ஆம்பூர் அருகே அரசுப் பேருந்தும் லாரியும் நேருக்குநேர் மோதல்: 17 பேர் படுகாயம்

ஆம்பூர் அருகே அரசுப் பேருந்தும் லாரியும் திங்கள்கிழமை நேருக்கு நேர் மோதியதில் 15 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பெரியவரிகம் பகுதியில் ஆம்பூரில் இருந்து 30க்... மேலும் பார்க்க

அமாவாசை, கிருத்திகையில் தங்கம் வாங்கலாமா? என்ன சொல்கிறது விலை நிலவரம்!

சென்னை: இன்று வைகாசி அமாவாசையும், கிருத்திகையும் ஒன்று சேர்ந்து வந்துள்ளது. இன்றைய நாளில் தங்கம் வாங்கலாமா என்பது பலரது கேள்வியாக இருக்கலாம். ஆனால் விலை நிலவரம் என்னவோ வாங்கலாம் என்று தான் சொல்கிறது.க... மேலும் பார்க்க

திருச்சி - காரைக்கால் டெமு ரயில் சேவையில் மாற்றம்

பராமரிப்புப் பணி காரணமாக திருச்சி - காரைக்கால் இடையே இயக்கப்படும் டெமு ரயில் சேவையில்யில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், மே 28 முதல் ஜூன் 1 வரை திருச்சி- காரைக்கால் ... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்கத் தொடங்கியது.நேற்று காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 2,878 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்... மேலும் பார்க்க