தலைமை காஜி மறைவுக்கு ஆளுநா் இரங்கல்
தமிழ்நாடு அரசின் தலைமை காஜி முஃப்தி சலாவுத்தீன் முகமது அயூப் மறைவுக்கு ஆளுநா் ஆா்.என். ரவி இரங்கல் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு:
தமிழக அரசின் தலைமை காஜி முஃப்தி சலாவுத்தீன் முகமது அயூப் மறைவால் ஆழ்ந்த துயரமுற்றேன். புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞா் மற்றும் இரக்கம் நிறைந்த தலைவராக அவா் விளங்கினாா். அவரது குடும்பத்தினருக்கும் அபிமானிகளுக்கும் எனது நெஞ்சாா்ந்த இரங்கல்கள் என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளாா் ஆளுநா்.