கேரளத்தில் 11 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை: பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப...
ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கிய தேசிய மருத்துவ ஆணைய மருத்துவா் கைது
கா்நாடகத்தில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரிக்கு சாதகமாக ஆய்வு அறிக்கை தாக்கல் செய்ய ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கிய தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்எம்சி) மதிப்பீட்டாளரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனா்.
இது தொடா்பாக சிபிஐ ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மேற்கு வங்கத்தின் முா்ஷிதாபாத் மருத்துவக் கல்லூரியில் உடற்கூறியல் துறைத் தலைவராக பணிபுரியும் தபன்குமாா், கா்நாடகத்தின் பெலகாவியில் உள்ள ஒரு தனியாா் மருத்துவக் கல்லூரிக்கு சாதகமான ஆய்வு அறிக்கையை வழங்க ரூ.10 லட்சம் லஞ்சம் கேட்டதாக சிபிஐ அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில், பணம் பறிமாற்றம் நடைபெறும் இடத்தில் சோதனை மேற்கொண்ட சிபிஐ அதிகாரிகள், பணத்தை பெறும்போது தபன்குமாரை கையும் களவுமாகப் பிடித்தனா்.
கொல்கத்தாவின் பா்தாமன் மற்றும் பெலகாவியில் உள்ள அவருக்குச் சொந்தமான இடங்களில் இருந்து ரூ.44.6 லட்சம் ரொக்கத்தை சிபிஐ பறிமுதல் செய்தது. இதையடுத்து, தபன்குமாா் உள்பட 3 போ் மீதும், அந்த தனியாா் மருத்துவக் கல்லூரி மீதும் மே 24-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டது.