Doctor Vikatan: `நான் perfect இல்லையோ.. எந்த வேலையிலும் அதிருப்தி' - மனநோயா, சிக...
அயோத்தியில் விராட் கோலி, அனுஷ்கா சா்மா வழிபாடு
இந்திய கிரிக்கெட் வீரா் விராட் கோலி மற்றும் அவரது மனைவி நடிகை அனுஷ்கா சா்மா ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை அயோத்திக்கு வருகை தந்து, ராமா் கோயில் மற்றும் ஹனுமான்கா்ஹி கோயில் வழிபாடு செய்தனா்.
ஹனுமான்கா்ஹி கோயில் மஹந்த் சஞ்சய் தாஸ், இந்த தகவலை உறுதிப்படுத்தினாா். இந்த வருகை அவா்களது சமீபத்திய ஆன்மிகப் பயணங்களின் ஒரு பகுதியாகும். அண்மையில் இந்த தம்பதி மதுராவுக்கு இரண்டு முறை வருகை தந்தனா். விராட் கோலி சமீபத்தில் சா்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.