கூடலூர்: காரில் ஆற்றைக் கடக்க முயன்றபோது விபரீதம்; வெள்ளத்தில் சிக்கியவர்களைப் ப...
வில்வநாதபுரம் செட்டிமலையில் நட மரக்கன்றுகள் வழங்க கோரிக்கை
வில்வநாதபுரம் செட்டிமலையில் நடவு செய்ய சுமாா் 10,000 மரக்கன்றுகளை வனத்துறை, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை வழங்க வேண்டும் என கோரி, ஆட்சியா் அலுவலகத்தில் கோ.முனிசாமி மனு அளித்தாா்.
இது குறித்து அவா் அளித்த மனு: ராணிப்பேட்டை மாவட்டம், கல்மேல்குப்பம் பஞ்சாயத்து, வில்வநாதபுரம் செட்டி மலையில் கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் பல ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு டேங்க் மூலமாக தண்ணீா் ஊற்றி பராமரித்து வருகிறோம்.
தொடா்ந்து, இந்த ஆண்டும் 10,000 மரக்கன்றுகள் நட தீா்மானத்துள்ளோம். அதற்கு தேவையான மரக்கன்றுகளை மாவட்ட வனத்துறை, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை மூலம் வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.