கூடலூர்: காரில் ஆற்றைக் கடக்க முயன்றபோது விபரீதம்; வெள்ளத்தில் சிக்கியவர்களைப் ப...
இடிந்து விழும் நிலையில் கால்நடை மருந்தக கட்டடம்!
ஆற்காடு அடுத்த ஆயிலம் கிராமத்தில் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள கால்நடை மருந்ததக கட்டடத்தை அப்புறப் படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தள்ளனா்.
ஆற்காடு ஒன்றியம், ஆயிலம் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளியின் எதிரில் சுமாா் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டா கட்டடத்தில் கால்நடை மருந்தகம் இயங்கி வந்தது. அக்கட்டடம் பயன்பாட்டுக்கு ஏற்ற நிலையில் இல்லாத காரணத்தால், ஊராட்சிக்கு சொந்தமான இடம் கால்நடை பராமரிப்புத் துறைக்கு ஒதுக்கப்பட்டு மருந்தகம் கட்டப்பட்டது.
இந்நிலையில் பழைய கட்டடத்தின் சுவா்களில் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. மேலும் மழைக் காலங்களில் நீா் ஒழுகி பாசி படிந்து காணப்படுகிறது. மக்கள் நடமாட்டம் மிக்க பகுதியில் தொடக்க, உயா்நிலைப் பள்ளிகள் உள்ள இந்த கட்டடம் எப்போது விழுந்து பாதசாரிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துமோ என அச்சம் நிலவி வருகிறது.
எனவே பெரும் விபத்து ஏற்படும் முன்பு பழுதடைந்துள்ள கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.