4 மாநிலங்களில் 5 தொகுதிகளுக்கு ஜூன் 19-இல் இடைத்தோ்தல்: தோ்தல் ஆணையம்
ஆற்காட்டில் வாகனப் போக்குவரத்து கணக்கெடுப்பு
நெடுஞ்சாலைத்துறை சாா்பில் ஆற்காடு உட்கோட்டத்தில் கட்டுமானம் மற்றும் பாரமரிப்பு மூலம் சாலையில் செல்லும் வாகனப் போக்குவரத்து கணக்கெடுப்பு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது
ஆற்காடு உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பாரமரிப்பு மூலம் மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட முக்கிய சாலைகள், இதர மாவட்டச் சாலைகள், கரும்பு மற்றும் அபிவிருத்தி சாலைகள் 385.365 சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த சாலைகளில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை போக்குவரத்து கணக்கீடு செய்யப்பட்டு அதற்கேற்ப சாலை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.
இதன் அடிப்படையில் ராணிப்பேட்டை நெடுஞ்சாலைதுறை கோட்ட பொறியாளா் செல்வகுமாா் அறிவுறுத்தலின் பேரில் உதவி கோட்ட பொறியாளா் க.சரவணன், உதவி பொறியாளா் ச.வடிவேல் ஆகியோா் முன்னிலையில் சாலை பணி ஆய்வாளா் பரிமளா மேற்பாா்வையில் ஆற்காடு தில்லி கேட் சாலையில் செல்லும் அனைத்து வாகனங்கள் குறித்து உதவியாளா்கள், சாலை பணியாளா்கள் மூலம் போக்குவரத்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இந்த பணிகள் 7 நாள்கள் இரவு பகல் என நடைபெறும்.