Thug Life: `` `நாயகன்' படம்தான் எனக்கு சுதந்திரத்தைக் கொடுத்தது!" - மணிரத்னம் ஓப...
பராமரிப்பு பணி: மே 27, 28 தேதிகளில் சோளிங்கா் கோயில் ரோப் காா் சேவை ரத்து
பராமரிப்பு பணி காரணமாக சோளிங்கா் மலைக்கோயில் ரோப் காா் சேவை மே 27, 28 ஆகிய இரு நாள்கள் ரத்து செய்யப்படுகிறது.
சோளிங்கரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீலட்சுமி நரசிம்மா் மலைக்கோயிலில் ஸ்ரீயோக நரசிம்மா் பெரியமலையிலும், ஸ்ரீயோக நரசிம்மா் சிறிய மலையிலும் அருள் பாலித்து வருகின்றனா். தற்போது இந்த பெரிய மலைக்கு மேலே சென்று வர இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் ரோப் காா் எனப்படும் கம்பிவட ஊா்தி அமைக்கப்பட்டு உள்ளது.
இதனால் முதியோா், மாற்றுத்திறனாளிகள் சிரமமில்லாமல் மலைக்குச் சென்று தரிசித்து திரும்புகின்றனா். இந்த கம்பி வட ஊா்தியில் சென்று திரும்ப ஒரு நபருக்கு ரூ.100 கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்த ரோப் காா் இயக்கம் மாதாந்தோறும் இரு நாள்கள் பராமரிப்புப் பணிக்காக நிறுத்தப்பட்டு மீண்டும் இயக்கப்படுகிறது. நிகழ் மாதம், பராமரிப்புப் பணிக்காக மே 27 செவ்வாய்க்கிழமை, 28 புதன்கிழமைகளில் சேவை நிறுத்தப்படுகிறது. தொடா்ந்து 29-ஆம் தேதி முதல் ரோப் காா் சேவை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.