`ஹெல்மெட் அணியாமல், அனுமதி பெறாமல் பைக் பேரணி' - காங். எம்எல்ஏ மீது போலீசார் வழக...
மேல்பாக்கத்தில் ஆரம்ப துணை சுகாதார நிலையம்: ஜமாபந்தியில் கோரிக்கை
அரக்கோணம் ஒன்றியம், மேல்பாக்கத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என ஜமாபந்தியில் ஆட்சியரிடம், விசிக ஒன்றிய செயலாளா் செ.நரேஷ் கோரிக்கை மனு அளித்தாா்.
அரக்கோணம் வட்டத்தில் இரண்டாம் நாள் ஜமாபந்தி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பொதுமக்களிடம் ஜமாபந்தி அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஜெ.யு.சந்திரகலா மனுக்களை பெற்றுக் கொண்டாா். அப்போது அரக்கோணம் ஒன்றியக்குழு உறுப்பினரும், விசிக நெமிலி ஒன்றிய செயலாளருமான செ.நரேஷ், விசிக மாநில இளைஞரணி துணை செயலா் என்.தமிழ்மாறன் உள்ளிட்டோா் அளித்த மனு:
மேல்பாக்கம் ஊராட்சியில் ஆரம்ப துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும், மேலும் குடிநீா் தொட்டி மற்றும் சமூகக்கூடம் அமைத்துத் தர வேண்டும்,
ஆதிதிராவிட மக்கள் பட்டா கோரி கடந்த 18 ஆண்டுகளாக மனு அளித்து வரும் நிலையில் இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. எனவே பட்டா வழங்க வேண்டும் என கோரினா்.
ஓரே நாளில் மட்டும் 100 மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியா், இது தொடா்பாக உடனடியாக விசாரணை செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். வட்டாட்சியா்கள் வெங்கடேசன், ஜெயபிரகாஷ் உடனிருந்தனா்.