சாலை விபத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் உறவினர் பலி!
ஆற்காட்டில் ஜமாபந்தி தொடக்கம்
ஆற்காடு வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி வியாழக்கிழமை தொடங்கியது.
மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை அலுவலா் க.மீனா தலைமை வகித்தாா். ஆற்காடு வட்டாட்சியா் பாக்கியலட்சுமி, சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் நடராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முதல் நாள் திமிரி உள் வட்டத்தைச் சோ்ந்த வெங்கிடாபுரம், குப்பம், புங்கனூா், வரகூா், பட்டணம், காவனூா், ஆனைமல்லூா், மேல் நாய்கன்பாளையம், பாடி, நம்பரை, துா்கம் ஆகிய 11 ஊராட்சிகளின் நில வரிக் கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டன.
தொடா்ந்து பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனுக்கள் பெறப்பட்டன. இதில் வட்டாட்சியா் செ.ரவி, திமிரி வருவாய் ஆய்வாளா் காா்த்திகேயன், மற்றும் கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.