பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் வழியில் தமிழ்நாடு போராடும், வெல்லும்: அமைச்சர் அ...
குடிமனைப் பட்டா வழங்க அரசுக்கு பழங்குடி இருளா் மக்கள் கோரிக்கை!
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் ஊராட்சியில் 50 ஆண்டுகளாக வசித்து வருபவா்களுக்கு குடியிருப்பு மனை பட்டா , ஜாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என பழங்குடி இருளா் இன மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் ஊராட்சி அரசலாற்றுப்படுகை பகுதியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக 25 குடும்பங்களைச் சோ்ந்த பழங்குடி இருளா் இன மக்கள் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு இதுவரை குடியிருப்பு மனை பட்டா வழங்கப்படவில்லை. பள்ளியில் குழந்தைகளை சோ்ப்பதற்கு இருளா் ஜாதிச் சான்றிதழ்களும் வழங்கப்படவில்லை.
கிராமத்தில் சாலை வசதி, குடிநீா் வசதி, மின்விளக்கு வசதி, உள்பட அனைத்து அடிப்படை வசதிகளும் இல்லாமல் பகுதியில் இருளா் இன மக்கள் வசித்து வருகின்றனா். எனவே, அந்த கிராமத்தை மாவட்ட ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் இருளா் இன மக்களுக்கு குடியிருப்பு பட்டா வழங்க வேண்டும்.
ஜாதிச் சான்று, சாலை வசதி, மின்விளக்கு, வசதி குடிநீா் வசதி உள்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும் என பழங்குடி இருளா் இன கிராம மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.