செய்திகள் :

Waqf Bill: `முஸ்லிம் மறுமை, இந்து மோட்சம், கிறிஸ்தவ அர்பணிப்பு, ஆகமொத்தம்..' - உச்ச நீதிமன்ற நீதிபதி

post image

வக்ஃப் சட்டத் திருத்த மசோதா மீதான இடைக்காலத் தடை விதித்திருந்த உச்ச நீதிமன்றத்தில் இந்த சட்டத் திருத்தம் தொடர்பான வாதங்களை உச்ச நீதிமன்றம் கேட்டு வருகிறது. மூன்றாம் நாளான நேற்று தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் விவாதம் நடந்தது.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிஸிட்டர் ஜெனரல் தூஷர் மேத்தா, ``வக்ஃப் என்பது தர்மம், அவ்வளவுதான். அது இஸ்லாத்தின் மிக முக்கியமானப் பகுதி அல்ல" என்றார்.

வக்ஃப் திருத்தச் சட்டம்
வக்ஃப் திருத்தச் சட்டம்

இதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான், ``இந்து மதத்தின் வேதங்களின்படி, கோயில்கள் மிகமுக்கியமானவை அல்ல. இயற்கையை வணங்குவதற்குதன் விதி இருக்கிறது. உதாரணமாக நெருப்பு, நீர், மழை, மலை, கடல் என ஒவ்வொன்றுக்கும் தனிக் கடவுள்கள் இருக்கின்றன. எனவே இயற்கையை வணங்குவதுதான் அவசியம்." என பதிலளித்தார்.

அதைத் தொடர்ந்து பேசிய மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ``வக்ஃப் என்பது கடவுளுக்கென அர்ப்பணிக்கப்பட்டது. அது சமூகத் தொண்டுக்காக வழங்கப்பட்டது. ஒருமுறை கொடுத்தால், கொடுத்தவரேக் கூட திரும்பப் பெற முடியாது" என்றார்.

இதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி கவாய், ``தொண்டு என்பது எல்லா மதங்களின் அடிப்படைக் கொள்கையாகும்" என்றார்.

இதற்கு பதிலளித்த கபில் சிபல், ``மற்ற மத தர்மத்துக்கும் வக்ஃப்புக்கும் வித்தியாசம் இருக்கிறது. முஸ்லிம்களின் நம்பிக்கையின் படி இது வெறும் தொண்டுக்காக மட்டுமல்ல, மறுமையில் இந்த சொத்துக்களின் மூலம் ஆன்மீக நன்மையை நோக்கமாகக் கொண்டது. எனவே இது சமூக நலனை மட்டுமல்ல, தெய்வீக நோக்கங்களுக்கு சேவை செய்யும் நோக்கம் கொண்ட ஒரு பக்திச் செயலாகும்" எனத் தெரிவித்தார்.

கபில் சிபல்

இதற்கு நீதிபதிகள் அமர்வில் இருந்த நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசி, ``வக்ஃப், மறுமை வாழ்க்கைக்காக கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு காணிக்கை. அதேப் போல இந்து மதம் மோட்சம் என அதைக் குறிப்பிடுகிறது. கிறிஸ்துவத்திலும் இதுபோல அர்பணிப்பு இருக்கிறது. ஆகமொத்தம் நாம் அனைவரும் சொர்க்கத்திற்குச் செல்ல பாடுபடுகிறோம்" என்றார்.

இந்த விவாதங்களுக்கு பிறகு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

குழந்தை தலையில் முட்டை உடைத்து டிக்டாக் வீடியோ - தாய்க்கு ரூ.1.7 லட்சம் அபராதம்! - ஏன் தெரியுமா?

ஸ்வீடனிலுள்ள ஹெல்சிங்போர்க்கை சேர்ந்த 24 வயது பெண்ணொருவர், தனது மகளுடன் இணைந்து ஆப்பிள் கேக் செய்த வீடியோவை 2023 ஆம் ஆண்டு டிக்டாக்கில் பதிவிட்டிருந்தார். இந்த வீடியோவால் மன உளைச்சலுக்கு உள்ளான பார்வை... மேலும் பார்க்க

Tasmac : `அனைத்து வரம்புகளையும் மீறி விட்டீர்கள்’ - அமலாக்கத்துறை விசாரணைக்கு இடைக்கால தடை

ஆயிரம் கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த புகார்களின் அடிப்படையில், டாஸ்மாக் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு பதிவு செய்த அமலாக்கத்துறை, அதன் தலைமை அலுவலகத்தில் ரெய்டு நடத்தியதுடன், அதன் மூத்த... மேலும் பார்க்க

மாநில அரசின் 'துணைவேந்தர் நியமன' அதிகாரம்; சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை!

தமிழக பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி இயற்றப்பட்ட சட்டப்பிரிவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல்கலைக... மேலும் பார்க்க

``சிவில் நீதிபதி தேர்வு எழுத 3 ஆண்டுகள் வழக்கறிஞராக அனுபவம் வேண்டும்'' - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

நீதிபதிக்கான தேர்வுகள் எழுத மூன்றாண்டு வழக்கறிஞர் அனுபவம் கட்டாயம் தேவை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.``2002 ஆம் ஆண்டு உத்தரவுக்குப் பிறகு, புதிய சட்டப் பட்டதாரிகளை எந்த நடைமுறை அனுபவமும் இல்லா... மேலும் பார்க்க

நமக்குள்ளே...

பாலியல் வன்கொடுமை என்பதே கொடூரம்தான். கொடூரத்திலும் கொடூரம்... பொள்ளாச்சி கூட்டுப் பாலியல் வன்கொடுமை. தற்போது இந்த வழக்கில், 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருப்பது, சட்டத்த... மேலும் பார்க்க

"இந்தியா ஒன்றும் தர்மசாலை அல்ல" - இலங்கை தமிழர் மனுவில் உச்ச நீதிமன்றம்!

இலங்கை நாட்டைச் சேர்ந்தவரின் அடைக்கலம் கோரும் மனு மீதான விசாரணையின்போது, இந்தியா ஒன்றும் தர்மசாலை அல்ல என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது பேசு பொருளாகியுள்ளது. நீதிபதி தீபங்கர் தத்தா மற்றும் நீதிபதி கே வி... மேலும் பார்க்க