சென்னையில் பரவலாக மழை
சென்னையின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
நேற்று (மே 22) தெற்கு கொங்கன் கடலோரப்பகுதியை தாண்டியுள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று காலை (மே 23) நிலவரப்படி அதே பகுதிகளில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தில்லியில் 23 கரோனா பாதிப்புகள் உறுதி! கண்காணிப்புகள் தீவிரம்!
இந்த நிலையில் சென்னையின் பல்வேறு இடங்களில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி, தாம்பரம், குரோம்பேட்டை, சேலையூர், பெருங்களத்தூர், வண்டலூர், முடிச்சூர், ஆலந்தூர், ஆதம்பாக்கம், மீனம்பாக்கம், கிண்டி, பரங்கிமலை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.
இரவு பெய்து வரும் இந்த திடீர் மழையால் சற்று வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சீதோசன நிலை காணப்படுகிறது.