Parasakthi: 'சிவகார்த்திகேயனுக்காக வெயிட்டிங்..!' - அப்டேட் கொடுத்த சுதா கொங்கரா
சங்கரன்கோவில் வருவாய் வட்ட ஜமாபந்தியில் 380 மனுக்கள்!
சங்கரன்கோவில் வருவாய் வட்டத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் 380 மனுக்கள் பெறப்பட்டன. சங்கரன்கோவில் வட்டாட்சியா் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தலைமையில் 4 நாள்கள் ஜமாபந்தி நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து 380 மனுக்கள் பெறப்பட்டன.
15 மனுக்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, பட்டா மாறுதலுக்கான ஆணை வழங்கப்பட்டது. பின்னா் 3 நபா்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. இதனை ஆட்சியா் வழங்கினாா். ஜமாபந்தியில் வட்டாட்சியா் பரமசிவன், வருவாய்த் துறை அலுவலா்கள், பொதுமக்கள் பலா் கலந்துகொண்டனா்.