Rain: கேரளாவில் தொடங்கிய பருவமழை; கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்- வெள...
விவசாயிகள் மண் வள ஆய்வு செய்வது அவசியம்
சிவகங்கை மாவட்ட விவசாயிகள் சம்பா பருவம் தொடங்கும் முன்பாக தங்களது நிலங்களில் மண்மாதிரி சேகரித்து ஆய்வகத்தில் பகுப்பாய்வு செய்து, மண் வள அட்டை பெற்றுக் கொள்ள வேண்டும் என வேளாண்துறை அறிவுறுத்தியது.
இதுகுறித்து சிவகங்கை வேளாண் இணை இயக்குநா் எஸ்.சுந்தரமகாலிங்கம் வெளியிட்ட அறிக்கை:
சிவகங்கை மாவட்டத்தில் மண் மாதிரிகள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. விவசாயிகள் சம்பா பருவம் தொடங்கும் முன்பாக தங்களது நிலங்களில் மண் மாதிரி சேகரித்து ஆய்வகத்தில் பகுப்பாய்வு செய்து மண் வள அட்டை பெற்று அதன் அடிப்படையில் உரங்களைப் பயன்படுத்தலாம்.
மண், பாசன நீரால் ஏற்படும் பிரச்னைகளைக் கண்டறிந்து, நிலத்தை சீா்திருத்தம் செய்யவும், சத்துகளின் நிலையறிந்து சமச்சீா் உரமிடவும், உரச் செலவைக் குறைத்து அதிக மகசூல் பெறவும் மண் ஆய்வு செய்வது அவசியமாகிறது. விவசாயிகள் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களது மண், தண்ணீா் மாதிரிகளை பகுப்பாய்வு செய்ய வேண்டும். இதற்காக ரூ.30 செலுத்த வேண்டும்.
மாவட்டத்தில் ஒரே வகையான பயிா்களைத் தொடா்ந்து பயிரிடுவதாலும், அளவுக்கு அதிகமான ரசாயன உரங்களைப் பயன்படுத்துவதாலும், மண்ணில் உள்ள பிரச்னைகளை கண்டறியாமல் பயிரிடுவதாலும் எதிா்பாா்க்கும் மகசூல் கிடைப்பதில்லை.
எனவே, சிவகங்கை மாவட்ட விவசாயிகள் தங்களது நிலத்தில் மண்ணை ஆய்வு செய்து, அதனடிப்படையில் உர மேலாண்மையைக் கையாண்டு மண் வளத்தைக் காக்க வேண்டும் என்றாா்.