ஹோண்டா சிபி 1000 ஹார்னெட் எஸ்பி அறிமுகம்! வியக்கவைக்கும் விலையில்..!
மே 26ல் குஜராஜ் செல்கிறார் பிரதமர் மோடி: பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல்!
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக மே 26, 27ல் குஜராத் மாநிலத்துக்குச் செல்லவுள்ளதாக மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி..
பிரதமர் மோடி குஜராத்துக்கு வருகிற 26,27 ஆகிய இரண்டு நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். காந்தி நகரின் மகாத்மா மந்திரில் நடைபெறும் நகர்ப்புற மேம்பாட்டு ஆண்டுக்கான அர்ப்பணிப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். பிரதமர் மோடியின் வருகை மாநில மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரை வரவேற்க மக்கள் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் மோடியின் வருகையைத் தொடர்ந்து மாநிலத்தில் ரூ.82,500 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கிவைத்து அடிக்கல் நாட்ட உள்ளார்.
பூஜ் நகரில் ரூ. 53,414 கோடி மதிப்பிலான 33 மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார். மேலும் குஜராத் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் பயணடையும் வகையில், ஆஷாபுரா ஆன்மிக மையத்தில் வளர்ச்சி பணிகளையும் தொடங்கிவைக்க உள்ளார்.
கட் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த ஆன்மிக மையத்தின் வளாகம் ரூ.32.71 கோடி மதிப்பில் புதுப்பித்தல் மற்றும் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டு அதற்கான பணிகளை மாநில அரசு மற்றும் குஜராத் பவித்ர யாத்ராதம் விகாஸ் வாரியம் இணைந்து மேற்கொண்டது. இது தற்போது நிறைவடைந்துள்ளது. ஆஷாபுரா மாதா கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கான மேம்பட்ட வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.