செய்திகள் :

தமிழக முதல்வர் அமலாக்கத்துறைக்கு அஞ்சுபவர் அல்ல - வைகோ

post image

சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அமலாக்கத்துறை சோதனைக்கு அஞ்சுபவர் அல்ல என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறினார்.

சி.பா. ஆதித்தனாரின் நினைவு தினத்தையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரின் திரு உருவச் சிலைக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமலாக்கத் துறை சோதனைக்கு எல்லாம் அஞ்சுகிறவர் அல்ல. எதிர்கட்சிகள் எதையாவது பேச வேண்டும் என்பதற்காக பேசிக்கொண்டு இருக்கிறார்கள். முதலமைச்சர் புதிய புதிய புரட்சிகரமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின், மக்கள் மனதில் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளார். எதிர்கட்சிகள் எதையாவது பேச வேண்டும் என பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என்று கூறினார்.

நகைக் கடன் புதிய விதிகளை திரும்பப் பெற வேண்டும்: விஜய்

நகைக்கடன் புதிய வரைவு விதிகளை ரிசர்வ் வங்கி உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஏழை, நடுத்தர மக்களின் ஆபத்பாந்தவனாக வி... மேலும் பார்க்க

பிரதமர் மோடியிடம் பேசியது என்ன? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

பிரதமர் மோடியை சந்தித்து தமிழகத்திற்கான பல்வேறு கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் முன்வைத்துள்ளார்.பிரதமர் மோடி தலைமையில் நீதி ஆயோக் கூட்டம் தில்லி பாரத் மண்டபத்தில் இன்று(மே 24) நடைபெற்றது. இதில் முதல்வர... மேலும் பார்க்க

மன உளைச்சலில் அன்புமணி! 2026 தேர்தல் வெற்றியில் பாமக?

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்போம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான ராமதாஸுக்கும், அக்கட்சித் தலைவரான அன்புமணி ராமதாஸுக்கும் அண்மையில் கர... மேலும் பார்க்க

சொத்துவரி விவகாரம்: இபிஎஸ்-க்கு அமைச்சர் கே.என் நேரு பதில்

சொத்துவரி உயர்வு விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமிக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ‘’ஓலைக் குடிசைகள், ஓட்டு ... மேலும் பார்க்க

கிராமங்களில் உள்ள ஓலை குடிசை, ஓட்டு வீடுகளுக்கு சொத்துவரி உயர்வு: இபிஎஸ் கண்டனம்

கிராமங்களில் உள்ள ஓலை குடிசை, ஓட்டு வீடுகளுக்கு சொத்துவரி உயர்வுக்கு அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “ஆட்சிக்கு வந்த 48 மாதங்கள... மேலும் பார்க்க

கனமழை: நீலகிரியில் சுற்றுலாத் தலங்கள் மூடல்!

நீலகிரியில் கனமழை எச்சரிக்கையால் பைன் ஃபாரஸ்ட், தொட்டபெட்டா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு அடுத்த இரு நாள்கள் (மே 25, 26) அதி கனமழைக்கான ச... மேலும் பார்க்க