Thug Life "கடல் படத்துக்கு வாய்ப்பு தேடினேன்; 14 வருஷம் கழிச்சு இன்னைக்கு.."- நெ...
பிரதமர் மோடியிடம் பேசியது என்ன? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
பிரதமர் மோடியை சந்தித்து தமிழகத்திற்கான பல்வேறு கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் முன்வைத்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையில் நீதி ஆயோக் கூட்டம் தில்லி பாரத் மண்டபத்தில் இன்று(மே 24) நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்பட பல்வேறு மாநில முதல்வர்கள் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். அப்போது தமிழகத்திற்கான நிதி சார்ந்த கோரிக்கை மனுவை பிரதமரிடம் அளித்து, நிதியை விடுவிக்க முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
இந்த சந்திப்பிக்குப் பிறகு தில்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்திற்கான நிதி நிலுவை குறித்து பேசினேன். செங்கல்பட்டு-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையை 8 வழிச் சாலையாக்க கோரினோம். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள், படகுகளை மீட்கக் கோரினோம். தமிழகத்துக்கு கல்வி நிதி கிடைக்குமென நம்பிக்கையோடு இருப்போம்.
மன உளைச்சலில் அன்புமணி! 2026 தேர்தல் வெற்றியில் பாமக?
கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கோரிக்கை வைத்தோம். கோவை, மதுரையில் மெட்ரோ திட்டங்கள் குறித்து கோரிக்கை வைக்கப்பட்டது. என்னிடம் வெள்ளை கொடியும் இல்லை, இபிஎஸ் இடம் உள்ள காவி கொடியும் இல்லை. எப்போது தில்லி வந்தாலும் சோனியா காந்தி, ராகுல் காந்தியை சந்திப்பேன். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றாலும், அரசியலும் பேசுவோம்.
டாஸ்மாக், மணல் குவாரி ஊழல் என பொய்யாக பிரசாரம் செய்கிறார்கள். தேர்தல் நெருங்க நெருங்க இதுபோன்ற பிரசாரங்களை செய்வார்கள் என்றார்.