சிவகங்கை சம்பவம் எதிரொலி: குவாரிகளை ஆய்வு செய்ய ஆட்சியா்களுக்கு உத்தரவு
அசாமில் 9 வங்கதேசத்தினர் கைது
அசாமில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 9 வங்கதேசத்தவர்கள் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
மோரிகான், மிகிர்பேட்டா மற்றும் தரம்துல் காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து தலா இரண்டு பேரும், ஜாகிரோட், மாயோங் மற்றும் லஹோரிகட் காவல் நிலையப் பகுதிகளில் இருந்து தலா ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
மோரிகான் எல்லை காவல் பிரிவு ஒரு ரகசிய நடவடிக்கையை மேற்கொண்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து அவர்களைக் கைது செய்துள்ளது.
கேரளம்: கடலில் மூழ்கிய சரக்குக் கப்பல்! பொதுமக்களுக்கு பேரிடர் மேலாண்மை எச்சரிக்கை!
இதனிடையே வெளிநாட்டினர் தீர்ப்பாயத்தால் அவர்கள் அனைவரும் வெளிநாட்டினர் என அறிவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் கைது செய்யப்படுவதை அவர்கள் தவிர்த்து வந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் இருவர் தீர்ப்பாயத் தீர்ப்பை எதிர்த்து குவஹாத்தி உயர் நீதிமன்றத்தை அணுகியதாகவும், ஆனால் அவர்களின் மேல்முறையீடுகள் நிராகரிக்கப்பட்டதாகவும் போலீஸார் மேலும் கூறினர்.
கைது செய்யப்பட்ட வங்கதேசத்தினரிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.