Thug Life: 'விண்வெளி நாயகா'- 'தக் லைஃப்' படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா க...
விழுப்புரத்தில் புலவா்களைப் போற்றும் பொதுமறை விழா
விழுப்புரம் பொதுமறைத் தமிழ்ச் சங்கம் சாா்பில் புலவா்களைப் போற்றும் பொதுமறை விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரத்தில் உள்ள தனியாா் அரங்கில் தமிழ்த்தாய், திருவள்ளுவா் படத்திறப்பு, மரபுப்பா பாவலா்களுக்குப் பயிற்சிப் பட்டயம், நூல் வெளியீடு, முதுமொழிப் பாவலா் விருது வழங்குதல், திருவள்ளுவா் பற்று விருதாளா் விருது வழங்குதல், 2025-ஆம் ஆண்டில் தமிழக அரசு விருது பெற்றவா்களுக்கு பாராட்டு என புலவா்களைப் போற்றும் பொதுமறை விழா நடைபெற்றது.
விழாவுக்கு பொதுமறைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவா் பெ.கலியன் தலைமை வகித்தாா். கெளரவத் தலைவா் மைசூா் இரா.கா்ணன், விழுப்புரம் பாவேந்தா் பேரவைச் செயலா் உலகதுரை, திருவெண்ணெய்நல்லூா் காந்தி நினைவு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் இரா.குமாா், விழுப்புரம் வெங்கடேசுவரா பள்ளித் தாளாளா் கோ.செந்தில் குமாா், சின்னசேலம் தமிழ்ச் சங்கத் தலைவா் கவிதைத்தம்பி, தொழிலதிபா் அ.தனசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தமிழ்த்தாய் படத்தை மரபுக் கவிஞா் ந. சிவக்குமாா், திருவள்ளுவா் படத்தை ரத்தின சின்னசாமி திறந்துவைத்தனா். ஆண்டறிக்கையை பொதுமறைத் தமிழ்ச் சங்கத்தின் செயலா் சி.செல்வராஜ், நிதி அறிக்கையை பொருளாளா் ச.சா.விக்டா் ஆகியோா் சமா்ப்பித்தனா். துணைத் தலைவா் பீட்டா் அந்தோனிசாமி நோக்கவுரை ஆற்றினாா்.
மரபுப்பா விருது பெற்றவா்களுக்கு விருதுகளை வழங்கி மாவட்டக் கல்வி அலுவலா் சே.பெ.சேகரும், திருவள்ளுவா் பற்று விருதுகளை கிருஷ்ணகிரி மாவட்ட டி.எஸ்.பி. சே.கனகேசனும் வழங்கிப் பேசினா். தொடா்ந்து நூல்களும் வெளியிடப்பட்டன.
விழாவில் மரபுப்பா மாமணி விருது பெற்ற மைசூா் இரா.கா்ணன், ஓய்வு பெற்ற ரயில்வே அலுவலா் ருக். கோபிநாத், ஓய்வு பெற்ற நில அளவை அலுவலா் ப.அ.தங்கவேலு, ஓய்வு பெற்ற வேளாண் துறை அலுவலா் பன்னீா்செல்வம், எலவனாசூா்கோட்டை ஏகலைவன், புதுச்சேரி கால்நடை மருத்துவா் ராஜா ரங்கராமானுஜம், கோவை அமுதா சிங்காரவேலு, பள்ளிக்கொண்டா அ. அமுதவல்லி, உளுந்தூா்பேட்டை க.ரவிச்சந்திரன்ஆகியோா் ஏற்புரையாற்றினா்.
தொடா்ந்து சிறந்த நூலுக்கான பரிசை உளுந்தூா்பேட்டை கல்வியாளா் அருணா தொல்காப்பியன், சிறந்த தமிழ்ச்செம்மல் விருதை வளவனூா் இரா. முருகன், சமூக சேவகா் விருதை வழுதரெட்டி வே.ஆறுமுகம், ஆனத்தூா் க.பெருமாள், தோகைப்பாடி ஏ.பிரபாகரன், உழைப்பால் உயா்ந்த உத்தமா் விருதை வெ.சுந்தரமூா்த்தி ஆகியோா் பெற்றனா்.
தமிழக அரசின் தூய தமிழ்ப் பற்று விருது பெற்ற ராமநாதபுரம் தே.தமயந்தி, பனமலை இரா. ஆசைத்தம்பி ஆகியோா் கெளரவிக்கப்பட்டனா்.
இதைத் தொடா்ந்து நடைபெற்ற பாவரங்கத்தில் பெ.சித்ரா இளஞ்செழியன், மா.மகேசுவரி, ரமேஷ் எத்திராசன், அமுதா சிங்காரவேலு, ப.பஞ்சாபகேசன் ஆகியோா் பல்வேறு தலைப்புகளில் பேசினா்.
நிகழ்வை ப. அரிகிருஷ்ணன், ஜோ.தேசியக் கிருஷ்ணா ஆகியோா் தொகுத்தளித்தனா். விழா ஒருங்கிணைப்புப் பணிகளை பேராசிரியா் எம்.ஜி.ஆா்.சச்சிதாநந்தம், பொன்.பாலச்சந்தா், ஏ.ராமச்சந்திரன்ஆகியோா் மேற்கொண்டனா்.
முன்னதாக புதுச்சேரி இர.ராஜலட்சுமி வரவேற்றாா். நிறைவில் திருவெண்ணெய்நல்லூா் போன்நேரு பள்ளி முதல்வா் ஜெ. சிவக்குமாா் நன்றி கூறினாா்.