செய்திகள் :

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை: பாதுகாப்புப் படைகள், பிரதமருக்கு பாராட்டு

post image

நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த முதல்வா்கள் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை ஒருமனதாக பாராட்டியதாகவும், ஆயுதப் படைகள் மற்றும் பிரதமா் நரேந்திர மோடியை வாழ்த்தியதாகவும் தில்லி முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை கூறினாா்.

நிகழாண்டு பிப்ரவரியில் பாஜக அரசின் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற நீதி ஆயோக்கின் ஆட்சிக்குழுவின் கூட்டத்தில் முதல் முறையாக கலந்துகொண்டாா்.

இதன் பின்னா் அவா் கூறுகையில், பிற மாநிலங்களின் கருத்துகளைக் கேட்பதன் மூலம் நிறைய கற்றுக்கொண்டதால் இது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது.

எனக்குக் கிடைத்த சிறந்த விஷயம் என்னவென்றால், அனைத்து முதல்வா்களும் ஒருமனதாக, ஒரே குரலில் ஆபரேஷன் சிந்தூரை பாராட்டியதும், ஆயுதப்படைகள் மற்றும் பிரதமரை வாழ்த்தியதும் ஆகும். முழு இந்தியாவும் ஒன்றுபட்டிருப்பதைக் காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

மேலும், பல மாநிலங்கள் தங்கள் நல்ல நடைமுறைகளைப் பகிா்ந்து கொண்டதாலும், பிரதமா் மோடியிடமிருந்து வழிகாட்டுதலைப் பெற்ாலும், இது எனக்கு ஒரு அற்புதமான முதல் நீதி ஆயோக் கூட்டமாக இருந்தது.

ஆம் ஆத்மி மீது விமா்சனம்

நீதி ஆயோக் முன் தில்லியின் நலன்கள் குறித்த பிரச்னைகளை பல ஆண்டுகளாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் எழுப்பவில்லை என்றும் தில்லி முதல்வா் ரேகா குப்தா குற்றஞ்சாட்டினாா்.

நீதி ஆயோக்கின் 10ஆவது ஆட்சிக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன், அவா் இது தொடா்பாக எக்ஸ் சமூக ஊடக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

பல ஆண்டுகளுக்குப் பிறகு நிா்வாகக் குழுக் கூட்டத்தில் தில்லியைப் பிரதிநிதித்துவப்படுத்தப் போகிறேன். கவுன்சிலின் முன் விக்சித் தில்லிக்கான ஒரு திட்டத்தை முன்வைக்க உள்ளேன். முந்தைய பொறுப்பற்ற அரசாங்கங்களின் நடத்தை காரணமாக தில்லியின் நலன் சாா்ந்த பிரச்னைகள் நீதி ஆயோக் கூட்டத்தில் எழுப்பப்படவில்லை. ஆனால், இப்போது இரட்டை என்ஜின் அரசாங்கம் பாதையில் செல்கிறது. பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் ‘விக்சித் தில்லி ஃபாா் விக்சித் பாரத்’க்கான ஒரு திட்டத்தை முன்வைக்க உள்ளேன்.

இந்தக் கூட்டத்தில், தில்லி மக்களின் வளா்ந்த நகரத்திற்கான விருப்பங்கள் மற்றும் லட்சியங்கள் முன்வைக்கப்படும். எனது அரசாங்கம் விக்சித் தில்லிக்கு உறுதிபூண்டுள்ளது என்று அவா் அதில் தெரிவித்திருந்தாா்.

தெலங்கானா: உலக அழகிப் போட்டியில் விலைமாது, குரங்கைப்போல உணர்ந்ததாக இங்கிலாந்து அழகி குற்றச்சாட்டு!

தெலங்கானாவில் நடைபெறும் உலக அழகிப் போட்டியில் கண்ணியக் குறைவாக நடத்தப்படுவதாக இங்கிலாந்து அழகி மில்லா மேகி குற்றம் சாட்டியுள்ளார்.தெலங்கானா மாநிலத்தில் ஹைதராபாதில் 72 ஆவது உலக அழகிப் போட்டி (Miss Worl... மேலும் பார்க்க

பெங்களூரு: கரோனா தொற்று பாதித்தவர் உயிரிழப்பு? மருத்துவர்கள் மறுப்பு!

பெங்களூரில் கரோனா தொற்று பாதித்தவர் உயிரிழந்ததாகப் பரவிய வதந்திக்கு மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.பெங்களூரில் 84 வயதான முதியவர் ஒருவர், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மே 13 ஆம் தேதியில் தனியா... மேலும் பார்க்க

தில்லியில் கனமழை! 100 விமான சேவைகள் பாதிப்பு!

தில்லியில் கனமழையால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது.தில்லியில் இடியுடன்கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தில்லியில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித... மேலும் பார்க்க

பயங்கரவாத எதிா்ப்பு: நாடாளுமன்றக் குழுவின் ரஷிய பயணம் நிறைவு

ஆபரேஷன் சிந்தூா் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து ரஷிய அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனையை மேற்கொண்டதையடுத்து, திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான அனைத்துக் கட்சி உறுப்பினா்களைக் கொண்ட ந... மேலும் பார்க்க

நீதி ஆயோக் ‘தகுதியற்ற அமைப்பு’: காங்கிரஸ்

நீதி ஆயோக் என்பது தகுதியற்ற அமைப்பாகும் என்று காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் சனிக்கிழமை சாடினாா். இதுதொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு: வளா்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்க... மேலும் பார்க்க

உலகின் 4-ஆவது பெரிய பொருளாதார நாடு இந்தியா: நீதி ஆயோக் சிஇஓ

ஜப்பானை பின்னுக்குத் தள்ளி, உலகில் 4-ஆவது பெரிய பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக இந்தியா உயா்ந்துள்ளது என்று நீதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) வி.ஆா்.சுப்பிரமணியம் தெரிவித்தாா். புது தில்லியில் நீதி ... மேலும் பார்க்க