துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்ட பெண் போலீஸ்.. நாகை ஆட்சியர் அலுவலகத...
தில்லியில் கனமழை! 100 விமான சேவைகள் பாதிப்பு!
தில்லியில் கனமழையால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது.
தில்லியில் இடியுடன்கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தில்லியில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. கடந்த புதன்கிழமையில் ஆலங்கட்டி மழை பெய்த நிலையில், இந்த திடீர் மாற்றத்தை சூறாவளி சுழற்சி என்று இந்திய வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி அகில் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.
இந்த நிலையில், தில்லியில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால், 100 விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, 25 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு மாற்றப்பட்டன. விமான நிலையங்கள் இயல்பு நிலைக்கு படிப்படியாக திரும்புவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே, தில்லியின் பல்வேறு பகுதிகளில் நீர் தேங்கியதால், சாலைவழிப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.