கார்த்தி பிறந்த நாள்: சர்தார் - 2 போஸ்டர் வெளியீடு!
நடிகர் கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு சர்தார் - 2 படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.
நடிகர் கார்த்தி மெய்யழகன் படத்தைத் தொடர்ந்து சர்தார் - 2 படப்பிடிப்பில் இணைந்தார். இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் பெரிய பொருள் செலவில் உருவாகி வருகிறது. இதில், நடிகர்கள் எஸ். ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
சீனா - இந்தியா உளவுத்துறை கதையாக உருவாகிவரும் இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் டீசர் அண்மையில் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், நடிகர் கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று இப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
அதில், கார்த்தி துப்பாக்கியுடன் இருக்கும் படம் இடம்பெற்றுள்ளது. இது ரசிகர்களிடம் படம் குறித்த ஆவலை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: கூட்டத்தை வழிநடத்தும் தலைவன் நீங்கள்... சிம்புவைப் பாராட்டிய கமல்!