உலகின் 4-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயர்ந்துள்ளது: நீதி ஆயோக் செயல் அதிகா...
லாலுவின் மூத்த மகன் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்: என்ன காரணம்?
ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் தனது மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவை கட்சியிலிருந்து அதிரடி நீக்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், மூத்த மகனின் செயல்பாடுகள், பொது நடத்தை மற்றும் பொறுப்பற்ற நடத்தை எங்கள் குடும்ப மதிப்புகள் மற்றும் மரபுகளுக்கு ஏற்ப இல்லை.
நான் அவரை கட்சியிலிருந்தும் குடும்பத்திலிருந்தும் நீக்குகிறேன்.
உதகையில் மரம் விழுந்து கேரள சிறுவன் பலி
இனிமேல், அவருக்கு கட்சியிலும் குடும்பத்திலும் எந்தப் பங்கும் இருக்காது. அவர் ஆறு ஆண்டுகளுக்கு கட்சியிலிருந்து நீக்கப்படுகிறார். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக தேஜ் பிரதாப் யாதவ் முகநூல் பதிவு ஒன்றில், இளம் பெண்ணுடன் உறவில் இருப்பதாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
பிறகு அடுத்த நாளே தனது முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்தே தேஜ் பிரதாப் யாதவ் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.