செய்திகள் :

உலகின் 4-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயர்ந்துள்ளது: நீதி ஆயோக் செயல் அதிகாரி

post image

புதுதில்லி: உலகின் 4 ஆவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயர்ந்துள்ளது என நீதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி வி.ஆா்.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

தில்லியில் அவர் செய்தியாளர்களுடன் பேசுகையில்,

புவி அரசியல் மற்றும் பொருளாதார சூழல் இந்தியாவுக்கு சாதகமாக அமைந்துள்ளது. தற்போது ஜப்பானை பின்னுக்குத் தள்ளி,உலகில் 4 ஆவது பெரிய பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக இந்தியா உயா்ந்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) அடிப்படையில், சரியான புள்ளிவிவரங்கள் மற்றும் நாணய மாற்று விகிதங்களைப் பொறுத்து, அமெரிக்கா, சீனா மற்றும் ஜெர்மனிக்கு அடுத்து ஜப்பானை பின்னுக்கு தள்ளி இந்தியா உலகளவில் நான்காவது இடத்தில் உள்ளது. இது பெருமைமிக்க மைல்கல். இது இந்தியாவின் வளர்ந்து வரும் உலகளாவிய பங்கு மற்றும் பொருளாதார வலிமையை பிரதிபலிக்கிறது. இருப்பினும், அனைவரும் நாட்டின் உயரும் நிலையிலிருந்து பயனடையும் வகையில் நிலையான வளர்ச்சியை உறுதி செய்வதற்கான அதிக பொறுப்பையும் இது கொண்டுள்ளது. நாட்டின் பொருளாதார மதிப்பு தற்போது சுமாா் ரூ.340 லட்சம் கோடியாக (4 ட்ரில்லியன் டாலர்) உள்ளது.

பெரும் பொருளாதார மதிப்பு கொண்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்கா, சீனா, ஜொ்மனி ஆகிய நாடுகள் முதல் 3 இடங்களை பிடித்துள்ளன. ஏற்கெனவே திட்டமிட்டபடி நாம் செயல்பட்டால், அடுத்த இரண்டரை முதல் 3 ஆண்டுகளில் உலகில் 3 ஆவது பெரிய பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக இந்தியா உயரும்.

உலகளாவிய பொருளாதார சக்தியாக இந்தியா உயர்ந்து வருவதால், பன்னாட்டு நிறுவனங்கள் நாட்டில் முதலீடு செய்யவும் கூட்டாளியாகவும் அதிக வாய்ப்புள்ளது. இதனால் உலகளாவிய வர்த்தக விதிகள், சுற்றுச்சூழல் பேச்சுவார்த்தைகள் மற்றும் தொழில்நுட்ப விதிமுறைகளை வடிவமைக்க முடியும்.

ஆபரேஷன் சிந்தூர் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது: பிரதமர் மோடி

மேலும், இந்த தரவரிசை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை அதிகரிக்கிறது, இது வெளிநாட்டு நேரடி முதலீடுகளை அதிகரிப்பதற்கும், பங்குச் சந்தை சிறப்பாகச் செயல்படுவதற்கும் வழிவகுக்கிறது. இந்தியாவை உலகளாவிய விநியோகச் சங்கிலிகளுக்கு சீனாவிற்கு மாற்றாக மாற்றும், உற்பத்தி, தொழில்நுட்பம், சில்லறை விற்பனை மற்றும் உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் அதிக வெளிநாட்டு நேரடி முதலீடுகள் அதிகரிக்கும்.

வளர்ந்து வரும் பொருளாதாரம் என்பது அதிக தொழில்கள், உள்கட்டமைப்பு மற்றும் சேவைகள், இது புதிய வேலைகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்புகளுக்கு வழிவகுக்கிறது. இது வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், குறிப்பாக கட்டுமானம், சேவைகள் மற்றும் பசுமை எரிசக்தி போன்ற துறைகளில் ஒரு பெரிய பொருளாதாரம் மற்றும் அதிக வருவாயை உருவாக்குகிறது, இது சாலைகள், ரயில்வே, டிஜிட்டல் இணைப்பு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டிற்கு அதிகயளவில் செலவிடுவதற்கு உதவுகிறது.

வளர்ந்து வரும் பொருளாதாரத்தால், வரி வருவாய் உயர்வு, அரசுசார்ந்த நலத்திட்டங்கள்,உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டிற்கு அதிகமாக செலவிட அனுமதிக்கிறது.

உயர்ந்த தரவரிசை பெரும்பாலும் மேம்பட்ட கடன் மதிப்பீடுகளுக்கு வழிவகுப்பதுடன், நாட்டின் வளர்ச்சிக்கு கடன் வாங்குவதை எளிதாக்குகிறது.

ஆனால், 4 ஆவது பெரிய நாடாக உயர்ந்தாலும், நாட்டின் தனிநபர் வருமானம் வளர்ந்த நாடுகளை விட இன்னும் மிகக் குறைவாகவே உள்ளது. சமத்துவமின்மை - கிராமப்புற மற்றும் நகர்ப்புற, பணக்காரர்கள் மற்றும் ஏழைகள், படித்தவர்கள் மற்றும் படிக்காதவர்கள் என சவாலாகவே உள்ளது.

சுகாதாரம், கல்வி மற்றும் உள்கட்டமைப்புகளில் இன்னும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் தேவைப்படுகிறது. மேலும் பொருளாதார வளர்ச்சியின் நன்மைகள் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் சென்றடைய வேண்டும்.

வளர்ச்சியுடன் வேலைவாய்ப்பு இல்லை என்றால், அது வேலையின்மை வளர்ச்சிக்கு வழிவகுக்கும். நாடு வளரும்போது பணவீக்கம், காலநிலை மாற்றம் மற்றும் நகர்ப்புற மன அழுத்தத்தை நிர்வகிப்பது மிகவும் முக்கியம் என சுப்பிரமணியம் கூறினார்.

குழந்தை கடத்தல் தடுப்புப் பிரிவின் மூலம் 964 குழந்தைகள் மீட்பு!

குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவின் மூலம் இதுவரை 964 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக குழந்தைகளின் உரிமை பாதுகாப்பு தேசிய ஆணையம் அறிவித்துள்ளது.இது குறித்து அந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சம... மேலும் பார்க்க

தனிநபர் வருவாய் குறித்து பிரதமர் பேசாதது ஏன்? காங்கிரஸ்

நாட்டு மக்களின் தனிநபர் வருவாய் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசாதது ஏன்? என காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா கேள்வி எழுப்பியுள்ளார். உலகின் நான்காவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்ந்துள்ளத... மேலும் பார்க்க

கேரளம்: சரக்குகளுடன் மூழ்கிய லைபீரிய கப்பல்- 24 பேர் மீட்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தின் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கந்தக எரிபொருள் ஏற்றிக்கொண்டு கொச்சி சென்று கொண்டிருந்த லைபீரிய சரக்குக் கப்பல், அரபிக் கடலில் மூழ்கிய நிலையில், நல்வாய்... மேலும் பார்க்க

லாலுவின் மூத்த மகன் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்: என்ன காரணம்?

ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் தனது மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவை கட்சியிலிருந்து அதிரடி நீக்கியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், மூத்த மகனின் செயல்பாடுகள், பொது நடத்தை ம... மேலும் பார்க்க

4 மாநிலங்களில் சட்டப்பேரவை இடைத்தேர்தல் அறிவிப்பு!

4 மாநிலங்களில் காலியாகவுள்ள 5 பேரவைத் தொகுதிகளுக்கும் ஜூன் 19ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தோ்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், குஜராத்தில் காடி, விசாவ... மேலும் பார்க்க

மழைக்கு இடிந்து விழுந்த காவல் அலுவலகம்: உள்ளே தூங்கிக்கொண்டிருந்த காவலர் பலி

காசியாபாத்தில் மழைக்கு காவல் அலுவலகம் இடிந்து விழுந்ததில் காவலர் ஒருவர் பலியானார். உத்தரப் பிரதேச மாநிலம், காசியாபாத்தில் மழைக்கு உதவி காவல் ஆணையர் அங்கூர் விஹார் லோனி அலுவலகத்தின் கூரை திடீரென இடிந்த... மேலும் பார்க்க