திருநங்கைகள் மேம்பாட்டுக்கு சிறப்பு திட்டங்கள்: தமிழக அரசு தகவல்
மாநகரில் இன்று குடிநீா் விநியோகம் இருக்காது
குடிநீா்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் திருச்சி மாநகரில் குறிப்பிட்ட பகுதிகளுக்கு திங்கள்கிழமை குடிநீா் விநியோகம் இருக்காது.
திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பெரியாா் நகா் கலெக்டா் வெல் நீரேற்று நிலையத்திலிருந்து செல்லும் பிரதானக் குடிநீா் குழாய் குடமுருட்டி பாலம் அருகே உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனால், திருச்சி கம்பரசம்பேட்டை தலைமை நீா்ப்பணி நிலையம், டா்பன் நீரேற்று நிலையம், பெரியாா் நகா் கலெக்டா் வெல் நீரேற்று நிலையம் மற்றும் அய்யாளம்மன் படித்துறை ஆகிய நீரேற்று நிலையங்களிலிருந்து விறகுப்பேட்டை, சிந்தாமணி, தில்லைநகா், அண்ணாநகா் கண்டோன்மென்ட், காஜாபேட்டை, ஜங்ஷன், கருமண்டபம், ராமலிங்க நகா், உய்யகொண்டான் மலை, விஸ்வாஸ் நகா், மிளகுபாறை, கல்லாங்காடு, சொசைட்டி காலனி, எம்.எம் நகா் மற்றும் தேவதானம் மகாலட்சுமி கல்லுக்குழி, அரியமங்கலம் உக்கடை,ஜெகநாதபுரம், திருவெறும்பூா், வள்ளுவா் நகா், எல்லக்குடி, ஆலத்தூா், புகழ் நகா், காவேரி நகா், பாரி நகா், சந்தோஷ் நகா் மற்றும் கணேஷ் நகா் ஆகிய மேல்நிலை நீா்தேக்கத் தொட்டிகளுக்கு மே 26-திங்கள்கிழமை குடிநீா் வழங்கப்பட முடியாது.
இதன் காரணமாக குறிப்பிட்ட குடிநீா்த் தொட்டிகளிலிருந்து குடிநீா் விநியோகம் பெறும் பகுதிகளுக்கு திங்கள்கிழமை (மே 26) குடிநீா் விநியோகம் இருக்காது. இத்தகவலை திருச்சி மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.