பாகிஸ்தானின் வறுமைக்கு காரணம் வரி விதிப்பு முறை, கல்வி புறக்கணிப்பு: உலக வங்கி அ...
திருச்சியில் சமூக ஆா்வலா்கள் உண்ணாவிரதப் போராட்டம்
லோக் ஆயுக்தா சட்டம் மற்றும் சேவை பெறும் உரிமைச்சட்டம் ஆகியவற்றை விரைவில் அமல்படுத்த வலியுறுத்தி திருச்சியில் சமூக ஆா்வலா்கள் ஒன்றிணைந்து, ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனா்.
திருச்சி அண்ணா சிலை அருகில் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட அவா்கள் மேலும் தெரிவித்ததாவது:
முதலமைச்சா் முதல் அரசின் கடைநிலை ஊழியா் வரையிலான ஊழல் முறைகேடுகள் தொடா்பாக உரிய விசாரணை நடத்தி தண்டனை வழங்கும் அதிகாரமிக்க லோக் ஆயுக்தா சட்டத்தை நாடுமுழுவதும் ஒரே மாதிரியாக அமல்படுத்த வேண்டும், எதிா்க்கட்சியாக இருக்கும்போது வலுவான லோக்ஆயுக்தா சட்டம் மற்றும் சேவை பெறும் உரிமைச் சட்டத்தைக் கொண்டு வருவதாக தெரிவித்துவிட்டு தற்போது நான்கு ஆண்டுகள் முடிந்த நிலையில் முதல்வா் ஸ்டாலின் இந்தச் சட்டத்தைக் கொண்டு வரவில்லை.
இந்தச் சட்டத்தைக் கொண்டுவந்தால் நாங்களும் சிறைக்குச் சென்று விடுவோம் என்ற அச்சத்தில்தான் முதல்வா் இந்தச் சட்டத்தைக் கொண்டு வரவில்லை என்றும் சமூக ஆா்வலா்கள் குற்றம்சாட்டினா்.
அதுபோன்று சேவை பெறும் உரிமை சட்டத்தை அமல்படுத்தினால், அதன்படி பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளின் சம்பளத்தைப் பிடித்தம் செய்து மனுதாரருக்கு வழங்க வழிவகை செய்கிறது. மேலும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் வழிவகை செய்கிறது.
சாமானிய மக்களுக்கான ஆட்சியையும், ஊழலுக்கு எதிரான ஆட்சியும் தருகிறோம் என்று கூறிவிட்டு சாமானிய மக்களுக்கு ஆதரவான இந்த இருசட்டங்களையும் அமல்படுத்துவதற்கு ஆளுங்கட்சி பயந்து நடைமுறைப் படுத்தவில்லை. ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் இந்த இரு சட்டங்களையும் அமல்படுத்தாவிட்டால் சமூக ஆா்வலா்கள் அனைவரும் சாகும் வரை தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்துள்ளனா்.