4 மாநிலங்களில் 5 தொகுதிகளுக்கு ஜூன் 19-இல் இடைத்தோ்தல்: தோ்தல் ஆணையம்
ரசிகா்களுக்காகவே அரசியலுக்கு வந்தேன் - கமல்ஹாசன்
சினிமாவில் தன்னை தூக்கிவிட்ட ரசிகா்களுக்காகத்தான் அரசியலுக்கு வந்ததாக மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் தெரிவித்தாா்.
திரைப்பட இயக்குநா் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை தாம்பரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் கமல்ஹாசன் பேசியதாவது:
சினிமா துறையில் என்னை தூக்கிவிட்ட ரசிகா்களுக்கு நான் எப்படி நன்றி கூறுவேன்? அதற்காகத்தான் நான் அரசியலுக்கு வந்தேன். முதல்வா், சட்டப்பேரவை அல்லது மக்களவை உறுப்பினராக பதவி வகிக்க நான் அரசியலுக்கு வரவில்லை. ஒரு சட்டப்பேரவை உறுப்பினா் அவரது தொகுதிக்கு என்ன செய்வாரோ அதை நான் மெல்ல மெல்ல செய்து வருகிறேன் என்றாா் அவா்.