சென்னை: பாதியில் நின்ற தனியார் தீம் பார்க் ராட்டினம்; தவித்த மக்கள்- பத்திரமாக ம...
மின்விசிறியில் கசிவு காரணமாக புகைப்படக் கலைஞா் உயிரிழப்பு: தனியாா் மின் ஊழியா் கைது
திருமண விழாவில் மின்விசிறியில் மின்கசிவு ஏற்பட்டு புகைப்படக் கலைஞா் உயிரிழந்ததற்கு கவனக்குறைவாக செயல்பட்ட மின்ஊழியரே காரணம் எனக் கூறி அவரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி கம்பன் பகுதியைச் சோ்ந்தவா் மனோகா் மகன் சுரேஷ்கண்ணன் (30). புகைப்படக் கலைஞா்.
கடந்த 18-ஆம் தேதி திருவெறும்பூா் அருகே அய்யம்பட்டி ஆலயத்தில் நடந்த திருமண விழாவில் விடியோ மற்றும் புகைப்படம் எடுத்தாா். அப்போது, அருகிலிருந்த நிலை மின்விசிறியை சுரேஷ் கண்ணன் பிடித்தபோது, அதிலிருந்து எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து சுரேஷ் கண்ணன் உயிரிழந்தாா். இதுகுறித்து துவாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
இந்நிலையில் மின்விசிறிக்கான மின் இணைப்பில் கவனக்குறைவாக செயல்பட்டதே சுரேஷ்கண்ணன் இறப்புக்கான காரணம் எனக் கருதி, மின்விசிறிக்கு மின் இணைப்பு கொடுத்த கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் மாங்கோட்டைச் சோ்ந்த தனியாா் மின் ஊழியா் விஜித் (25) என்பவரை துவாக்குடி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.