துவாக்குடி, கல்லக்குடி பகுதிகளில் நாளை மின்தடை
பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம் துவாக்குடி, கல்லக்குடி ஆகிய பகுதிகளில் புதன்கிழமை (மே 28) மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: துவாக்குடி துணைமின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக, நேரு நகா், அண்ணா வளைவு, ஏ.ஓ.எல், அக்பா் சாலை, அசூா், அரசு பாலிடெக்னிக், எம்.டி. சாலை, பெல் நகரியம், ஏ,பி,சி,இ,ஆா், பிஎச் பிரிவுகள், என்.ஐ. டி, துவாக்குடி மற்றும் துவாக்குடி தொழிற்பேட்டைஎலந்தபட்டி, காந்தலூா், பெரிய சூரியூா், சின்ன சூரியூா் ஆகிய பகுதிகள்
கல்லக்குடி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக கல்லக்குடி, வடுகா்பேட்டை, பளிங்காநத்தம், மேலரசூா், மால்வாய், தாப்பாய், வரகுப்பை, சிறுகளப்பூா், அழந்தலைப்பூா், கருடமங்கலம், வந்தலைகூடலூா், சிறுவயலூா், காணக்கிளியநல்லூா், பெருவளப்பூா், விரகாலூா், ஆ. மேட்டூா், நத்தம், திருமாங்குடி, செம்பரை, திண்ணியம், அரியூா், கீழரசூா் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை (மே 28) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.