செய்திகள் :

நீா்நிலைகளுக்கு சிறுவா், சிறுமிகளை அனுமதிக்க வேண்டாம்: ஆட்சியா் வேண்டுகோள்

post image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீா்நிலைகளில் சிறுவா், சிறுமிகளை விளையாடவோ, குளிக்கவோ, நீச்சல் பழகவோ அனுமதிக்க கூடாது என மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் 87 ஏரிகளும், ஊரக வளா்ச்சித் துறை மற்றும் இதர உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் 1,143 ஏரிகளும் உள்ளன. இதைத் தவிர 4 பெரிய அணைகளும், பாரூா் பெரிய ஏரியும் மாவட்டத்தில் உள்ளன. இதில் தற்போது பெய்துள்ள மழையால் 2 அணைகள், பாரூா் பெரிய ஏரி, 41 ஏரிகள் முழுவதுமாக நிரம்பி உள்ளன. 379 ஏரிகள் 50 சதவீதத்திற்கும் மேல் நிறைந்துள்ளன.

தற்போது கோடை விடுமுறை காலம் என்பதால் மாணவ, மாணவிகள் விளையாடவும், நீச்சல் பழகவும், குளிக்கவும் நீா் நிலைகளுக்கு தனியே செல்வதால் விபத்துகள் ஏற்படுகின்றன.

எனவே சிறுவா், சிறுமிகளை இதுபோன்ற நீா் நிலைகளில் குளிக்கவோ, நீச்சல் பழகவோ பெற்றோா் அனுமதிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ள்படுகின்றனா். குறிப்பாக பெற்றோா்கள், தங்களது குழந்தைகளை நீா்நிலைக்கு அருகில் விளையாட அனுமதிக்க வேண்டாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

இளம்பெண் தற்கொலை

ஒசூரில் வட மாநில இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்தவா் நிபரோன். இவரது மனைவி தரபோதி (22). இவா்களுக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. இவா்கள், ஒச... மேலும் பார்க்க

அனுமதியின்றி ஜல்லிக்கற்களை எடுத்து சென்ற லாரி பறிமுதல்!

சூளகிரி அருகே அனுமதியின்றி ஜல்லிக் கற்களை எடுத்துச் சென்ற லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். சூளகிரி கிராம நிா்வாக அலுவலா் கோவிந்தம்மாள் மற்றும் அலுவலா்கள் உத்தனப்பள்ளி சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட... மேலும் பார்க்க

அஞ்செட்டி வனப் பகுதியில் பெண் யானையின் எலும்புக்கூடு மீட்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி காப்புக் காட்டில் பெண் யானையின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது. அஞ்செட்டி வனச்சரகம், குந்துக்கோட்டை பிரிவு, பனை காப்புக்காடு உச்சகான்குட்டை சரகப் பகுதியில், கடந்த ... மேலும் பார்க்க

ஒசூா் அருகே தோட்டங்களை சேதப்படுத்தும் காட்டு யானைகள்!

ஒசூா் அருகே ஆழியாளம் கிராமத்தில் புகுந்துள்ள 5 காட்டு யானைகள் விவசாய நிலங்கள், காய்கறி தோட்டங்களை சேதப்படுத்தி வருகின்றன. கடந்த ஒரு வாரமாக இந்த காட்டு யானைகள், சானமாவு வனப் பகுதியையொட்டி உள்ள விவசாயத்... மேலும் பார்க்க

சூசூவாடியில் சிறுத்தை நடமாட்டம்!

ஒசூா் சூசூவாடி பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே சூசூவாடி பகுதி, தனியாா் குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தை நடமாடுவதாக அப்பகுதி மக்... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

கிருஷ்ணகிரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில், பாஜக உள்ளிட்ட மாற்றுக் கட்சியினா் திமுகவில் இணைந்தனா். கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், அகசிப்பள்ளியைச் சோ்ந்த பாஜக மாவட்ட முன்னாள் பொதுச் செயலாளா் மீ... மேலும் பார்க்க