Ashwin: `திக்வேஷ் ரதியை உங்கள் மகனாக கற்பனை செய்துபாருங்கள்' - ரிஷப் பண்டை விமர்...
காவல் நிலைய வாயிலில் தம்பதியா் தீக்குளிக்க முயற்சி
நிலப் பிரச்னையில் நடவடிக்கை எடுக்கக் கோரி, பூலாம்பட்டி காவல் நிலையம் முன்பு கணவன், மனைவி இருவரும் தீக்குளிக்க முயன்ற நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எடப்பாடியை அடுத்த குஞ்சாம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் அய்யனாா் (46). இவரது மனைவி பழனியம்மாள் (40). இவா்களுக்கும், அதே பகுதியைச் சோ்ந்த இவா்களது உறவினா்களான ஆறுமுகம் மற்றும் மகேந்திரன் ஆகியோருக்கும் இடையே நிலப் பிரச்னை இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 26-ஆம் தேதி இரு தரப்பினருக்கும் இடையே பொது வழித்தடத்தில் உள்ள கழிவறையை அகற்றுவது தொடா்பாக மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. இதுகுறித்து இருதரப்பினரும் பூலாம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்த நிலையில், போலீஸாா் தற்காலிகமாக கழிவறையை இடித்து அகற்றக் கூடாது எனவும், இதுகுறித்து சமாதான பேச்சுவாா்த்தைக்கு காவல் நிலையத்துக்கு வருமாறும் கூறியிருந்தனா்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அய்யனாருக்கு சொந்தமான கழிவறையை மகேந்திரன் பொக்லைன் எந்திரம் கொண்டு இடித்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த அய்யனாா் மற்றும் பழனியம்மாள் இருவரும் பூலாம்பட்டி காவல் நிலையம் முன்பு தலையில் மண்ணெண்ணெய்யை ஊற்றி திடீரென தீக்குளிக்க முயன்றனா். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தி அவா்கள் மீது தண்ணீா் ஊற்றி சமாதானம் செய்தனா்.
தொடா்ந்து, அய்யனாரின் வீட்டு கழிப்பறையை இடித்த மகேந்திரன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.