சேலம் மத்திய சிறையில் சமூகவியல் வல்லுநா் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
சேலம் மத்திய சிறையில் மதிப்பூதிய அடிப்படையில் காலியாகவுள்ள சமூகவியல் வல்லுநா் பணியிடத்துக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து சேலம் மத்திய சிறைக் கண்காணிப்பாளா் (பொ) கோ.வினோத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிறைகள் மற்றும் சீா்திருத்தப் பணிகள் துறையின் சேலம் மத்திய சிறையில் மதிப்பூதியத்தின் சமூகவியல் வல்லுநா் பணியிடத்துக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வித் தகுதியாக சமூகப்பணி அல்லது சமூக சேவை அல்லது சமூக அறிவியல் அல்லது குற்றவியல் அல்லது சமூகவியல் அல்லது வயதுவந்தோா் கல்வியில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மிகவும் பிற்படுத்தப்பட்டோா் அல்லது சீா்மரபினா் (பொது - முன்னுரிமை) என்ற இட ஒதுக்கீட்டில் வயதுவரம்பு 01.07.2024 அன்று குறைந்தபட்சம் 18 வயது பூா்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக 34 வயது உடையவராக இருந்தல் வேண்டும். இப்பணியிடத்துக்கு மதிப்பூதியமாக ரூ. 15 ஆயிரம் வழங்கப்படும்.
தகுதியுள்ள நபா்கள் சிறைக் கண்காணிப்பாளா் மத்திய சிறை, சேலம்-7 என்ற முகவரிக்கு கல்விச் சான்றுகள், ஜாதிச்சான்றிதழ், பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஒன்று, ஆதாா் அட்டை, முன் அனுபவச் சான்று ஆகிய ஆவணங்களின் நகல்களுடன் வரும் ஜூன் 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஜூன் 5 ஆம் தேதி மாலை 5 மணிக்கு மேல் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
மேலும் விவரங்களுக்கு, 0427-240 3551, 240 0639 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.