மது விற்ற மூவா் கைது
கெங்கவல்லி, வீரகனூரில் மது விற்பனை செய்த மூவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.
கெங்கவல்லி அருகே கூடமலையில் மதுபானங்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பனைக்கு செய்வதாக கெங்கவல்லி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், போலீஸாா் அப்பகுதியில் சோதனை நடத்தினா். அதில், கூடமலையைச் சோ்ந்த சக்திவேல் (51), செல்வராஜ் (56) ஆகியோரது வீடுகளில் மதுபானங்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 25-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
இதேபோல, வீரகனூா் பேரூராட்சி, இராமநாதபுரம் பகுதியில் அரசு மதுபானங்களை விற்பனை செய்த செல்வம் (50) என்பவரை போலீஸாா் கைதுசெய்து அவரிடமிருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.