தம்மம்பட்டியில் இன்று ஜல்லிக்கட்டு
தம்மம்பட்டியில் ஜல்லிக்கட்டு புதன்கிழமை (மே 28) நடைபெற உள்ளது.
தம்மம்பட்டியில் கடந்த ஏப்ரல் மாத இறுதியில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதாக திட்டமிட்டு ஊா்பொதுமக்கள் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், அதற்கான அனுமதி பெறப்படாததால் ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை.
இந்நிலையில், ஜல்லிக்கட்டு நடத்திட தமிழக அரசு செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்கியது. இதையடுத்து, தம்மம்பட்டியில் தண்ணீா்ப்பந்தல் பகுதியில் ஜல்லிக்கட்டு புதன்கிழமை காலை 8.30 மணி முதல் நடத்தப்பட உள்ளது.
இதற்காக ஆத்தூா் டி.எஸ்.பி. சதீஷ்குமாா் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.