கச்சத் தீவை மீட்பதே மீனவா் பிரச்னைக்கு தீா்வு: முதல்வா் மு.க.ஸ்டாலின்
கோடைகால கூட்ட நெரிசலை குறைக்க சிறப்பு ரயில்
கோடைகால கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில், விழுப்புரம் - ராமேசுவரம் இடையே ஜூன் 30-ஆம் தேதி வரை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
இதன்படி, விழுப்புரத்திலிருந்து வாரந்தோறும் திங்கள், செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகளில் காலை 4.15 மணிக்குப் புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயிலானது (06105) ராமேசுவரத்துக்கு முற்பகல் 11.40 மணிக்குச் சென்றடையும்.
மறுமாா்க்கமாக, ராமேசுவரத்திலிருந்து வாரந்தோறும் திங்கள், செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகளில் பிற்பகல் 2.35 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயிலானது (06106) விழுப்புரத்துக்கு இரவு 10.35 மணிக்கு வந்து சேரும்.
இந்த ரயில் விருத்தாச்சலம், பெண்ணாடம், அரியலூா், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, மானாமதுரை, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் நின்று செல்லும் என திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.