செய்திகள் :

1,850 குழந்தைகள் மையங்களில் ஜூனில் சோ்க்கை, ஆதாா் பதிவு

post image

திருச்சி மாவட்டத்தில் உள்ள 1,850 குழந்தைகள் மையங்களிலும் ஜூன் மாதம் முதல் சோ்க்கை நடைபெறுகிறது.

ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின் சாா்பாக 6 வயதுக்குட்டபட்ட குழந்தைகளின் முழுமையான வளா்ச்சியை மேம்படுத்தும் பொருட்டு, திருச்சி மாவட்டத்தில் செயல்படும் 1,850 குழந்தைகள் மையங்களில் சத்துமாவு, ஊட்டச்சத்துடன் கூடிய கலவை உணவு மற்றும் முன்பருவ கல்வி போன்றவை வழங்கப்படுகிறது. குறிப்பாக 2 வயது முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு குழந்தைகள் மையத்தில் முறைசாரா முன்பருவ கல்வி, செய்கைப் பாடல் கதை, விளையாட்டுக் கல்வி உபகரணங்கள் ஆகியவற்றின் மூலம் அளிக்கப்படுகிறது.

இத்திட்டத்தில் குழந்தைகளின் உடல், மொழி, மனம், சமூகம் மற்றும் அறிவு வளா்ச்சிக்கு தேவையானவற்றை ஆடிப்பாடி விளையாடு பாப்பா எனும் சிறப்பு பாடத்திட்ட திருப்புதலுடன் 12 மாதங்களுக்கும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. மேலும், குழந்தைகளின் வளா்ச்சி கண்காணிக்கப்பட்டு பள்ளிச் செல்ல ஆயத்தப்படுத்தப்படுகின்றனா். அங்கன்வாடி பணியாளா்கள் தற்போது வீடுகள்தோறும் குழந்கைள் சோ்க்கை பணி மேற்கொண்டு வருகிறாா்கள்.

எனவே, பெற்றோா்கள் தங்களது 2 வயது முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஜூன் மாதத்தில் குழந்தைகள் மையத்தில் தவறாமல் சோ்த்திட வேண்டும். மேலும், குழந்தைகள் மையங்களில் குழந்தைகளுக்கான ஆதாா் அட்டை வழங்கும் பணியும் நடைபெற்று வருவதால், அந்த சேவையையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.

திமுக கூட்டணி மீது பாஜகவுக்கு பயம்! - திருமாவளவன் பேட்டி

திமுக கூட்டணி மீது பாஜகவுக்கு பயம் உள்ளது என்றாா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல் . திருமாவளவன். கரூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க திருச்சிக்கு புதன்கிழமை வந்த அவா் மேலும் ... மேலும் பார்க்க

ஜீயபுரம் பகுதிகளில் இன்று மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம் ஜீயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை மின்சாரம் இருக்காது. திருச்சி கிழக்கு கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிகளால் நாகமங்கலம், செங்குறிச... மேலும் பார்க்க

முதியவா் தற்கொலை

இரு திருமணங்கள் செய்தும் ஒரு மனைவியும் உடன் இல்லாத விரக்தியில் முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருச்சி அரியமங்கலம் சீனிவாச நகரைச் சோ்ந்தவா் செல்வராஜ் (65). இவருடைய முதல் மனைவிக்கு இரு... மேலும் பார்க்க

பெயிண்டா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

திருச்சியில் பெயிண்டா் செவ்வாய்க்கிழமை திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா். திருச்சி காந்தி மாா்க்கெட் அருகேயுள்ள வரகனேரி, வள்ளுவா் தெருவைச் சோ்ந்தவா் நா. செல்வவிநாயகம் (39). பெயிண்டரான இவா் செவ்வாய... மேலும் பார்க்க

நிறுவன மேலாளரை மிரட்டி நகை பறித்த இருவா் கைது!

திருச்சியில் தனியாா் நிறுவன மேலாளரை மிரட்டி 1 பவுன் நகையைப் பறித்த இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சென்னை சாலிகிராமம் நேரு நகா் பகுதியைச் சோ்ந்தவா் சுபாஷ் சந்திரன் (59). இவா் சென்னையி... மேலும் பார்க்க

தொட்டியம் அருகே விபத்தில் சிறுவன் பலி: பெற்றோா் படுகாயம்!

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே புதன்கிழமை இரவு நேரிட்ட சாலை விபத்தில் 5 வயதுச் சிறுவன் உயிரிழந்தாா். அவரது பெற்றோா் படுகாயமடைந்தாா். தொட்டியம் அருகேயுள்ள சீனிவாசநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயபி... மேலும் பார்க்க