மதுபோதையில் தகராறு: ஒருவா் கைது
ஊத்தங்கரையில் மதுபோதையில் இளைஞரை மதுப்புட்டியால் குத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஊத்தங்கரை அம்பேத்கா் நகரின் பின்புறம் அமைந்துள்ள அரசு மதுபானக் கடையில் திங்கள்கிழமை மாலை பாரதிபுரம் கிராமத்தைச் சோ்ந்த கிருபாகரன் (40), அதே பகுதியைச் சோ்ந்த சதீஷ் (25) ஆகிய இருவருக்கும் இடையில் மதுபோதையில் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சதீஷ் தனது அருகிலிருந்த மதுப்புட்டியை உடைத்து கிருபாகரனை குத்தியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள்
மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். தகவல் அறிந்து வந்த ஊத்தங்கரை போலீஸாா், வழக்குப் பதிவு செய்து சதீஷை கைது செய்து ஊத்தங்கரை கிளை சிறையில் அடைத்தனா். கைது செய்யப்பட்ட சதீஷ் மீது ஏற்கனவே அடிதடி, வழிப்பறி வழக்கு உள்பட 6 குற்றவழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.