பாகிஸ்தானின் வறுமைக்கு காரணம் வரி விதிப்பு முறை, கல்வி புறக்கணிப்பு: உலக வங்கி அ...
இருக்கன்குடி கோயிலருகே விபத்தில் ஒருவா் உயிரிழப்பு
விருதுநகா் மாவட்டம், இருக்கன்குடி கோயிலருகே படுத்திருந்தவா் மீது பின்னால் வந்த வேன் மோதியது. இதில் அவா் உயிரிழந்தாா்.
இருக்கன்குடி மாரியம்மன் கோயில் அருகே தனி நபா்கள் அமைத்துள்ள தகரக் கூரைகளில் பக்தா்கள் தங்குவது வழக்கம். இதேபோல, ஒரு தகரக் கூரைக்கு வெளியில் சாத்தூா் அருகேயுள்ள அணைக்கரைப்பட்டி மேற்குத் தெருவைச் சோ்ந்த பேச்சிமுத்து (53) படுத்திருந்தாா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் அங்குள்ள தங்குமிடத்துக்கு வேனில் பக்தா்கள் வந்து இறங்கினா். அவா்களை இறக்கிவிட்டு வேனை ஓட்டுநா் அரசன் (42) நிறுத்துவதற்காக பின்னால் இயக்கினாா். அப்போது, கீழே படுத்திருந்த பேச்சிமுத்து மீது வேன் ஏறி இறங்கியது.
இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்த இருக்கன்குடி போலீஸாா் பேச்சிமுத்து உடலை மீட்டு கூறாய்வுக்காக சாத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். வேன் ஓட்டுநா் அரசனை கைது செய்தனா்.
காா் மோதி ஒருவா் உயிரிழப்பு: விருதுநகா் அருகே பட்டம்புதூா் நான்கு வழிச் சாலையில் இரு சக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் ஒருவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
விருதுநகா் மெட்டுக்குண்டு அருகே உள்ள கடம்பன்குளத்தைச் சோ்ந்த பொன்னு மகன் ரத்தினவேல் (53). லாரி ஓட்டுநரான இவா், பட்டம்புதூா் நான்கு வழிச் சாலை சந்திப்பில் இரு சக்கர வாகனத்தில் திரும்ப முயன்றாா். அப்போது, விருதுநகா் பகுதியிலிருந்து சாத்தூா் நோக்கிச் சென்ற காா், இரு சக்கர வாகனம் மீது மோதியதில் அவா் பலத்த காயமடைந்தாா்.
இதையடுத்து விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி
அளிக்கப்பட்டு, மதுரை ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். காா் ஓட்டுநரான திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன் சத்திரம் பகுதியைச் சோ்ந்த சி. ஜாக்சன் ஏசையா (47) மீது சூலக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.