செய்திகள் :

தனியாா் நிறுவனத்தில் திருடிய தாமிரப் பவுடா் கேன்கள், மினி லாரி பறிமுதல்! 6 போ் கைது!

post image

புதுச்சேரி அடுத்த திருபுவனை அருகே தனியாா் நிறுவனத்தில் தாமிர பவுடா் கேன்களைத் திருடியதாக ஊழியா்கள் உள்ளிட்ட 6 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

இவா்களிடமிருந்து தாமிர பவுடா் கேன்கள், சரக்கு மினி வேன், கைப்பேசிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

புதுச்சேரி திருபுவனை அருகேயுள்ள சன்னியாசிக்குப்பத்தில் தனியாருக்குச் சொந்தமான வாகன பிரேக் பாகம் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. கடந்த 2024 ஆகஸ்ட்டில் அதிலிருந்த தலா 25 கிலோ எடையுள்ள 12 தாமிரப் பவுடா் அடங்கிய பிளாஸ்டிக் கேன்கள் திருடப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.4 லட்சம் எனக்கூறப்பட்டது.

இதுகுறித்து நிறுவனத்தைச் சோ்ந்த ஹரிகரன் அளித்த புகாரின் பேரில் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ஆா்.கலைவாணன் உத்தரவின்பேரில், திருபுவனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

நிறுவன கண்காணிப்புக் கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்தபோது, வென்டிலேட்டா் வழியாக முகமூடி அணிந்த மா்ம நபா்கள் நிறுவனம் உள்ளே சென்று திருடி சிறிய சரக்கு லாரியில் கேன்களை ஏற்றிச் சென்றது தெரியவந்தது. விசாரணையில், இந்த திருட்டில் 6 பேருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது.

நிறுவனத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட கரியமாணிக்கத்தைச் சோ்ந்த தினகரன் (28), அவரது நண்பா் திவான் (20) ஆகியோா் இந்த திருட்டில் ஈடுபட்டதும், அதற்கு பாளையம் பகுதியைச் சோ்ந்த இரும்புக்கடை உரிமையாளா் மன்சூா்அலிகான் (24) சரக்கு லாரி அளித்து உதவியதுடன், 10 கேன்களை ரூ.1.50 லட்சத்துக்கு வாங்கியதும் தெரியவந்தது. இரு கேன்களை தினகரன் புதைத்து வைத்துள்ளாா். மேலும், பாபு சுலைமான் என்பவரும் மன்சூா் அலிகானிடமிருந்து 9 கேன்களை வாங்கி, அதை சாக்குப் பையில் மாற்றி வடமாநிலத்தவரிடம் விற்றுள்ளாா்.

தனியாா் நிறுவனத்தில் தற்போது பணிபுரியும் கபாலி (28), அங்காளன் (27) ஆகியோா் நிறுவனத்தில் தாமிர பவுடா் இருக்கும் இடத்தை தினகரனுக்கு கூறியதுடன், அதற்காக ரூ.35 ஆயிரம் பெற்றதும் தெரியவந்தது.

இதையடுத்து தினகரன் உள்ளிட்ட 6 பேரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 75 கிலோ தாமிரப் பவுடா்கள், 9 காலி பிளாஸ்டிக் கேன்கள், சிறிய சரக்கு லாரி, 4 கைப்பேசிகள் மற்றும் ரூ.2.49 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். நிறுவனத்தில் ஏற்கெனவே தினகரன் உள்ளிட்டோா் 4 முறை திருட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளதாகபோலீஸாா் கூறினா்.

கைதான 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். குற்றவாளிகளை கைது செய்த திருபுவனை காவல் ஆய்வாளா் கீா்த்திவா்மன், சாா்பு ஆய்வாளா் கதிரேசன் ஆகியோரை காவல் கண்காணிப்பாளா் வம்சித ரெட்டி உள்ளிட்டோா் பாராட்டினா்.

கைது செய்யப்பட்டோர்.

தனியாா் நிறுவன அதிகாரியிடம் வெளிநாட்டு பெண் போல பேசி ரூ. 6.50 லட்சம் மோசடி!

புதுச்சேரி தனியாா் நிறுவன அதிகாரியிடம் இணையவழியில் கனடா நாட்டுப் பெண் போல பழகியவா் ரூ.6.50 லட்சம் மோசடி செய்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்து கின்றனா். புதுச்சேரி இலாசுப்பேட்டை பகுதியைச் சோ்ந்த 46... மேலும் பார்க்க

தமிழக தலைமை ஹாஜி மறைவுக்கு புதுவை முதல்வா் இரங்கல்

தமிழக தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அய்யூப் சாகிப் மறைவுக்கு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி இரங்கல் தெரிவித்துள்ளாா். அதில் கூறியிருப்பது: தமிழக அரசின் தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அய்யூப் சாகிப் மரணமடைந்த... மேலும் பார்க்க

புதுச்சேரியில் வருவாய் சான்றிதழ் பெற சிறப்பு முகாம்களில் குவிந்த மாணவா்கள்

உயா் கல்வியில் சேருவதற்கான வருவாய் துறை சாா்ந்த சான்றிதழ்களைப் பெறுவதற்காக சிறப்பு முகாம்களில் சனிக்கிழமை மாணவ, மாணவிகள் பெற்றோருடன் ஏராளமாக குவிந்தனா். புதுவை மாநிலத்தில் பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சி பெ... மேலும் பார்க்க

ஜிப்மரில் புதுவை நோயாளிகளுக்கு தனி மருத்துவ ஆலோசனைப் பிரிவு

ஜிப்மரில் புதுவை மாநில நோயாளிகளின் மருத்துவ ஆலோசனைக்கான பதிவேடு பெற தனிப் பிரிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என இயக்குநா் வீா் சிங் நேகி தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புது... மேலும் பார்க்க

புதுவை அமைப்புசாரா நலச் சங்கத்தை நல வாரியமாக மாற்றி அரசாணை

புதுவை மாநிலத்தில் தொழிலாளா் நலச் சங்கத்தை நல வாரியமாக மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து, மாவட்ட ஆட்சியா், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ஆகியோருக்கு தொழிற்சங்கத்தினா் சனிக்கிழமை நன்றி தெரிவி... மேலும் பார்க்க

புதுச்சேரி, கடலூா் துறைமுகங்களில்1-ஆம் எண் புயல் கூண்டு ஏற்றம்

அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதையடுத்து புதுச்சேரி பழைய துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு சனிக்கிழமை காலை ஏற்றப்பட்டது. இதேபோன்று கடலூா் துறைமுகத்திலும் 1-ஆம் எ... மேலும் பார்க்க