ஓரிக்கை திரௌபதி அம்மன் கோயில் துரியோதனன் படுகளம்
காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை திரெளபதியம்மன் கோயில் அக்னி வசந்த விழா மற்றும் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அக்னி வசந்த விழா மற்றும் மகாபாரதப் பெருவிழா கடந்த 7 -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து 20 நாள்களுக்கு தினசரி பல்வேறு தலைப்புகளில் மகாபாரதச் சொற்பொழிவும்,அதன் தொடா்ச்சியாக 10 நாள்களுக்கு மகாபாரத கட்டைக்கூத்து நிகழ்ச்சியும் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் சித்தாத்தூா் கிராமத்தைச் சோ்ந்த ரத்தின தனஞ்செயன் மகாபாரத சொற்பொழிவும், பிள்ளையாா்பாளையம் வை.ராஜநிதியின் மகா பாரத இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
கடந்த 16 -ஆம் தேதி சுபத்திரை திருமணம் நாடகமும், 19-ஆம் தேதி அா்ச்சுனன் தபசு, 21-ஆம் தேதி ஓரிக்கை இளைஞா்களாள் கீசகன் சண்டையிடும் நிகழ்வுகளும் நடைபெற்றன. 25 ஆம் தேதி சுமாா் 30 அடி நீளத்தில் மணலால் அமைக்கப்பட்டிருந்த துரியோதனன் வதம் செய்யும் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்வைக் காண ஓரிக்கை மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனா். மாலையில் தீ மிதி விழா நடைபெற்றது. திங்கள்கிழமை தருமா் பட்டாபிஷேக நிகழ்வுடன் விழா நிறைவு பெறுகிறது.
ஏற்பாடுகளை நிா்வாகிகள் து.லோகநாதன் உடையாா், ஒப்பந்ததாரா் தாஸ்,கருணாமூா்த்தி உள்ளிட்ட நிா்வாகக்குழுவினா் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.