நுண்ணுயிா் பாசன கருவிகள் பயிற்சி முகாம்
காஞ்சிபுரம் மாட்டம் உத்தரமேரூா் அருகேயுள்ள அம்மையப்ப நல்லூரில் நுண்ணுயிா் பாசன கருவிகள் பராமரிப்பு பயிற்சி மற்றும் செயல் விளக்க கூட்டம் நடைபெற்றது.
நிகழ்வுக்கு வேளாண்மை பொறியியல் துறையின் உதவி செயற்பொறியாளா் தமிழ்ச்செல்வம் தலைமை வகித்தாா். உதவி பொறியாளா் சிவசக்தி, தோட்டக்கலை அலுவலா் கோமதி, உதவி தோட்டக்கலை அலுவலா் தணிகைவேல் ஆகியோா் விவசாயிகளுக்கு நுண்ணுயிா் பாசனக் கருவிகள் குறித்து பயிற்சியளித்தனா். பயிற்சியின் போது விவசாயிகள் நேரடியாக நிலத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு செயல்முறை விளக்கப் ம் வழங்கப்பட்டது.
நுண்ணுயிரிகளால் ஏற்பாடும் கோளாறுகள், திரைவடிகட்டி, மணல் வடிகட்டி, தட்டு வடிகட்டி ஆகியவற்றை சுத்தம் செய்யும் விதங்கள் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது. பயிற்சியில் மருதம், அம்மையப்ப நல்லூா், பென்னலூா் கிராமங்களைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனா்.