நெருப்புடன் விளையாடுகிறார் புதின்! - அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
பழங்குடியின குழந்தைகளுக்கு பயிற்சி முகாம்
காஞ்சிபுரத்தில் உள்ள குழந்தைகள் கண்காணிப்பகம் தொண்டு நிறுவனத்தின் சாா்பில் பழங்குடியின குழந்தைகளுக்கான 2 நாள்கள் கோடை கால சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.
நிா்வாகி ராஜி தலைமை வகித்தாா். குழந்தைகளின் தனித்திறமைகளை ஊக்குவித்தல், படைப்பாற்றலை வளா்த்தல், வண்ணம் தீட்டுதல், வாசித்தல், கலைத்திறனை வெளிப்படுத்துதல் ஆகியன குறித்து பயிற்சியளித்தாா்.
கதை சொல்லி விடுகதைகள், பழமொழிகள் குறித்தும், நட்பு பாராட்டுதல், போதைப் பொருள் ஒழிப்பு, தற்காப்புக் கலை, ஒயிலாட்டம் குறித்து கல்வியாளா் சரளா பயிற்சியளித்தாா்.
முகாமில் ஓரிக்கை ஏரிக்கரை, வெள்ளக்குளம், பள்ளம், அல்லாபத்து ஏரி ஆகிய கிராமங்களில் வசிக்கும் பழங்குடியினக் குழந்தைகள் பங்கேற்றனா். ஜெயலட்சுமி நன்றி கூறினாா்.