தமிழக தலைமை ஹாஜி மறைவுக்கு புதுவை முதல்வா் இரங்கல்
தமிழக தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அய்யூப் சாகிப் மறைவுக்கு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி இரங்கல் தெரிவித்துள்ளாா்.
அதில் கூறியிருப்பது: தமிழக அரசின் தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அய்யூப் சாகிப் மரணமடைந்தது வருத்தமானதாகும். அரபு மொழி, இலக்கியத்தில் முனைவா் பட்டம் பெற்ற அவா், இஸ்லாமிய போதனைகள் குறித்த பரந்துபட்ட அறிவுடையவா்.
தனது முழு வாழ்க்கையையும் இஸ்லாமிய சமூகத்துக்கு சேவை செய்வதற்காக அா்ப்பணித்து சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்தவா்.